காலில் விழுந்து கதறிய சந்தியா.. மனம் இறங்காமல் விவாகரத்து கொடுத்த சரவணன்!

ராஜா ராணி 2 சீரியல்

சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப தான் இத்தனை நாடகம் ஆடுகிறான் எனபதை புரிந்து கொண்டு பதறுகிறார்.

 • Share this:
  ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா காலில் விழுந்து கெஞ்சியும் சரவணம் மனம் இறங்காமல விவகாரத்து வழங்கிய எபிசோடு புரமோ வெளியாகியுள்ளது.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜார ராணி 2சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஆல்யா - சஞ்சீவ் நடிப்பில் ஒளிப்பரப்பான ராஜா ராணி முதல் சீசன் மிகப் பெரிய வெற்றி. இந்நிலையில் தற்போது அதன் இரண்டாவது சீசன் வெளியாகி அதுவும் டி.ஆர்பியில் நல்ல ரேட்டிங்கில் உள்ளது. இந்தி சீரியலில் ரீமேக்கான இந்த சீரியல் ஆரம்பத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. நாளடைவில் சந்தியாவாக ஆல்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர இந்த சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக இந்த சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்டுகள் ரசிகர்களை பரபரப்பாகவே வைத்துள்ளது. திட்டமிட்டப்படி பார்வதி நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சரவணன் முடிவில் இருந்தான்.

  இந்நிலையில், பார்வதியின் நிச்சயதார்த்தம் நல்ல படியாக முடிய, மாப்பிள்ளை சுந்தர் வீட்டார் பார்வதியின் படிப்பு முடிந்தவுடன் கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்று சிவகாமியிடம் கூறுகின்றனர். கடைசியில் சந்தியா சொன்ன அப்புறம் தான் இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார். இதனால் சிவகாமி உட்பட மொத்த குடும்பமும் சந்தியா மீது சீற தொடங்குகிறது. ஆனால் உண்மையில் சந்தியா மாப்பிள்ளை வீட்டாரிடம் அப்படி பேசவே இல்லை. இந்த கல்யாணம் நடக்க வேண்டுமென்று ஓடி ஆடி வேலைப்பார்த்தவர் சந்தியா தான். அதுமட்டுமில்லை விக்கியிடம் இருந்து சந்தியாவை காப்பாற்றி சுந்தருடனான கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கினார். ஆனால் சந்தியா மீது இப்படியொரு வீண் பழி விழ எல்லோரும் சந்தியாவை திட்டுகிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த பிரச்சனையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த சரவணன், சந்தியாவை திட்டிவிட்டு எல்லோர் முன்னிலையிலும் அவரை ரூமுக்கு அழைத்து செல்கிறார். ரூமில் வைத்தே சந்தியா பேகில் இருந்த விவகாரத்து நோட்டீஸை எடுத்து அதில் கையெழுத்திட்டு சந்தியாவிடம் கொடுக்கிறார். சந்தியா சரவணனின் காலில் விழுந்து அழுது கெஞ்சுகிறார். ஆனாலும் மனம் வராத சரவணன் சந்தியாவை தனது வாழ்க்கையை விட்டு போகும்படி சொல்லிறார்.  வெளியில்  குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு இதுப்பற்றி தெரியாது. சந்தியாவுடன் சரவணனும் ரூமில் சண்டை போட்டு கொள்வதாக நினைக்கிறார்கள். ஆனால் சரவணனின் அப்பா மட்டும் சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப தான் இத்தனை நாடகம் ஆடுகிறான் என்பதை புரிந்து கொண்டு பதறுகிறார். சந்தியாவும் சரவணனிடம் தனக்கு உங்களுடன் சேர்ந்து வாழ தான் விருப்பம் என்றும் சொல்கிறார். ஆனால் சரவணன் நமக்குள் இனி சரி வராது என்று மூஞ்சில் அடித்தது போல் சொல்லிவிட்டு ரூமில் இருந்து வெளியெறுகிறான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: