Home /News /entertainment /

பார்வதி கல்யாணத்தை கெடுக்க நினைத்த விக்கி.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய சரவணன்!

பார்வதி கல்யாணத்தை கெடுக்க நினைத்த விக்கி.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய சரவணன்!

பார்வதி

பார்வதி

ராஜா ராணி சீசன் 2 சீரியலின் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    ராஜா ராணி சீசன் 2வில் பார்வதி கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என விக்கி போட்ட பிளானில் கடைசியாக என்ட்ரி கொடுத்து ட்விஸ்ட் கொடுக்கிறார் சரவணன்.

    சீரியல் கதைக்களம் இப்போது பார்வதி - பாஸ்கர் கல்யாணம் குறித்தும் தான் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட கல்யாண தேதி உறுதியாகிவிட்ட நிலையில் அர்ச்சனாவுக்கு கல்யாணம் எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் ஓய்ந்த பாடில்லை. கடைசி ஆயுதமாக விக்கியை பயன்படுத்துகிறார். மாப்பிள்ளை பாஸ்கரிடம் பார்வதியை பற்றி தப்பு தப்பாக சொல்லி கல்யாணத்தை நிறுத்திவிட்டு, அதற்க்கு பதிலாக அவரின் தங்கையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே அவரின் பிளான்.

    PM kisan status : ரூ.2,000 தரும் மத்திய அரசு.. பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

    விக்கிக்கு, பார்வதி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வாட்ஸப்பில் அனுப்பி இதை வைத்து கல்யாணத்தை நிறுத்தும்படி விக்கிக்கு ஐடியாக கொடுப்பதே அர்ச்சனா தான். ஆனால் இந்த விஷயம் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கையில், நேற்றைய தினம் அந்த புகைப்படத்தை வைத்து விக்கி, பார்வதியை பிளாக் மெயில் செய்கிறான். இதைப்பற்றி சந்தியாவிடம் பார்வதி பேச, எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் சந்தியா. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    செம்ம ஹாப்பி நியூஸ்.. பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இனி அந்த வங்கியில் அதிக வட்டி!

    அதில், பாஸ்கரிடம் விக்கி, பார்வதி பற்றி தப்பு தப்பாக பேசி, ஆதாரமாக இருவரும் காதலிக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காண்பிக்கிறான். ஆரம்பத்தில் எல்லாமே உண்மை போல், நம்பி ஏமாந்து விட்டது போல் நடித்த பாஸ்கர், அடுத்த நில நொடிகளில் விக்கியை பளார் என கன்னத்தில் அறைகிறார். அதுமட்டுமில்லை, எனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்ற உண்மையையும் சொல்கிறார். விக்கிக்கு அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.



    அதாவது பார்வதி அண்ணன் சரவணன், பாஸ்கரை தனியாக சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது விக்கி - பார்வதி காதலித்த உண்மை, ஃபோட்டோக்களை காட்டி விக்கி மிரட்டுவது என எல்லா உண்மையும் சொல்லி பார்வதி மேல் எந்த தப்பும் இல்லை என விளக்கி இருக்கிறார். பின்னால் இருக்கும் காரணத்தை புரிந்து கொண்ட பாஸ்கர், பார்வதியை திருமணம் செய்ய முழு மனசுடன் ஓகே சொல்கிறார். அதனால் விக்கியின் அனைத்து ராஜதந்திரங்களும் இன்று வீணாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி