ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

8 வருட காத்திருப்பு.. நல்ல செய்தி சொன்ன சரவணன் மீனாட்சி சீரியல் ஜோடி!

8 வருட காத்திருப்பு.. நல்ல செய்தி சொன்ன சரவணன் மீனாட்சி சீரியல் ஜோடி!

செந்தில் - ஸ்ரீஜா

செந்தில் - ஸ்ரீஜா

” கூடிய விரைவில் நானும் ஸ்ரீஜாவும் அப்பா - அம்மா ஆக போகிறோம்”

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இந்த தகவலை மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டா மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான தொடர் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல்  ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் இந்த நெடுந்தொடரை விரும்பி பார்த்தனர். இதில் சரவணன் ரோலில் ஆர் ஜே மிர்ச்சி செந்தில் நடித்தார்.இவருக்கு ஜோடியாக ஸ்ரீஜா சந்திரன் மீனாட்சியாக நடித்தார். ஸ்ரீஜா மலையாள வரவு. இதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு சில படங்களில், சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

    விஜய் சேதுபதி மனைவியாக நடித்தவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு?

    இந்த சீரியலில் சரவணன் - மீனாட்சி ஜோடியின் கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்து போனது. ரீல் ஜோடியான இவர்கள் நிஜத்தில் இணைந்தாலும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். ஒருகட்டத்தில் அதுவும் நிஜமானது. மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா சினிமாவை விட்டு ஒதுங்கினார். மிர்ச்சி செந்தில் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் விஜய் டிவியில் கடைசியாக நடித்த நாம் இருவரும் நமக்கு இருவர் தொடர் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.




     




    View this post on Instagram





     

    A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)



    இந்நிலையில் சோஷியல்  மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் குட் நியூஸ் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த பதிவில் கூடிய விரைவில் நானும் ஸ்ரீஜாவும் அப்பா - அம்மா ஆக போகிறோம் என கூறி ஸ்ரீஜாவின் வளைக்காப்பு படங்களையும் அதில் ஷேர் செய்துள்ளார்.




     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)



    இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதுமட்டுமில்லை ஸ்ரீஜாவின் வளைக்காப்பு படங்களும் இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv