• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • ’உதவியின்றி தனிமரமாக நிற்கிறேன்’ - சரவணன் மீனாட்சி ராஜசேகர் மனைவி உருக்கம்!

’உதவியின்றி தனிமரமாக நிற்கிறேன்’ - சரவணன் மீனாட்சி ராஜசேகர் மனைவி உருக்கம்!

ராஜசேகர் - தாரா

ராஜசேகர் - தாரா

அவருடன் நடித்த நடிகர்களோ, நடிகர் சங்கமோ யாரும் உதவில்லை

 • Share this:
  சினிமா, நாடகம் என இரண்டு துறைகளிலும் பிரபல நடிகராக இருந்தவர் ராஜசேகர். ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதம் செப்டம்பரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் இயக்கத்தில் சுஹாசினி நடிப்பில் வெளியான பாலைவனச் சோலை, சின்னப் பூவே மெல்லப் பேசு, மனசுக்குள் மத்தாப்பூ ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

  சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனுக்கு அப்பாவாக நடித்தார். மிகப்பெரிய ஹிட் சீரியலான இதில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடமும் பிரபலமானார். தென்றல் சீரியலிலும் நடித்த அவருக்கு தாரா என்ற மனைவி உள்ளார். தற்போது அவருடைய வாழ்க்கை தான் சோகக் கதையாக உள்ளது. குழந்தைகள் யாரும் இல்லாத நிலையில், சொந்தபந்தங்களும் கைவிட்டுவிட்டதால், தனிமரமாக வாழ்ந்து வருகிறார்.

  தற்போதை வாழ்க்கை குறித்து சமூகவலைதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தாரா, அதில் தன்னுடைய கண்ணீர் கதையை விவரித்துள்ளார். ‘ சினிமா மற்றும் நாடகத்தில் நடித்து என்னுடைய கணவர் பிரபலமானவராக இருந்தாலும் எல்லா நேரத்திலும் காசு கிடைக்காது. வருமானம் வந்தபோதெல்லாம் தங்களுக்கு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் அக்கா, தங்கை எல்லோருக்கும் நிறைய காசுகளை செலவு செய்துவிட்டார். சொந்த வீடு கூட வாங்காமல் இருந்த அவர், கடைசி காலத்தில் எனக்காக வீடு ஒன்றை வாங்கினார். அதனையும் லோன் போட்டு வாங்கினார்.

  ஆனால் அந்த வீட்டில் அவர் ஒருநாள் கூட வசிக்கவில்லை. கிரகப்பிரவேசம் முடிவதற்குள்ளாகவே உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். கடைசி காலத்தில் அவரின் மருத்துவச் செலவுக்கு கூட யாரும் உதவவில்லை. வீட்டிற்கும் லோன் போடப்பட்டிருப்பதால், விடிந்தவுடன் லோன் கொடுத்தவர்கள் வந்து பணம் கேட்கின்றனர். எனக்கும் வருமானம் இல்லாததால், அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியிருக்கிறேன். என் கணவர் வாங்கிக் கொடுத்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறேன்.

  அவருடன் நடித்த நடிகர்களோ, நடிகர் சங்கமோ யாரும் உதவில்லை. என்னால் முடிந்தவரை முயன்று உதவிகளை பெற முயற்சி எடுத்தேன். எதுவும் சாத்தியமாகவில்லை. எத்தனை நாளுக்கு இந்த பிழைப்பு எனத் தெரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினிடன் உதவி கேட்க முடிவு செய்தாலும் அவரை அணுகுவதற்கு கூட யாரும் உதவ முன்வரவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எனக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: