ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகர் சரத்குமாருக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்து போன ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகர் சரத்குமாருக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்து போன ரசிகர்கள்!

பிக் பாஸ் சரத் குமார்

பிக் பாஸ் சரத் குமார்

பிக் பாஸூக்கு பெட்டியுடன் வந்த சரத்குமார், அந்த பெட்டியை திறந்து வைத்தார். அதில் 3 லட்சம் ரூபாய் இருந்தது. இதன் மதிப்பு மேலும் உயரலாம் என்றும் தெரிவித்தார்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி 94 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. கடந்த வாரம் சஞ்சீவ் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, நிரூப், பாவனி, அமீர் ஆகியோர் உள்ளனர். பொதுவாக, ஒவ்வொரு சீசனும் நிறைவடையும் தருவாயில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு கொடுக்கப்படும். முன்பு வெளியான 3ம் சீசனில் கூட கவின் 5 லட்சம் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் சீசன் -5 போட்டியாளர்களுக்கும் இதே வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

  மேலும், இந்த சீசனில் பணப்பெட்டி ஒரு முன்னணி பிரபலம் மூலம் கொண்டுவரப்பட்டது. கடந்த திங்களன்று ஒளிபரப்பான எபிசோடில், பிக்பாஸ் வீட்டுக்குள் சரத்குமார் வருகை தந்தார். அனைவரும் குஷியானதோடு, வந்தவர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர். நடிகர் சரத்குமார் அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு, போட்டியாளர்களுக்கு சில டாஸ்குகளையும் வழங்கினார். அதன் பின்னர் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டார். மேலும், நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள பரம்பரா எனும் வெப் சீரிஸின் டிரெய்லர் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த வலைத்தொடர் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது. இதில் ஜெகபதி பாபு, சரத்குமார், நவீனா சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  இதையும் படிங்க.. விஜய் டிவி ஆல்யா மானசாவை வம்பிழுத்த நெட்டிசன்கள்.. அந்த இயக்குனர் தான் காரணமா?

  அதன் பிறகு மீண்டும் கையில் ஒரு பெட்டியுடன் வந்த சரத்குமார், அந்த பெட்டியை திறந்து வைத்தார். அதில் 3 லட்சம் ரூபாய் இருந்தது. இதன் மதிப்பு மேலும் உயரலாம் என்றும் தெரிவித்தார். "இந்த பணத்துடன் இந்த போட்டியில் இருந்து விடை பெறுபவர்கள் விடை பெறலாம், யாராவது ஒருவர் தான் வெற்றி பெறப் போகிறீர்கள். இன்றைய இந்த பெனிஃபிட்டா? நாளைய சாதனையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு செல்வது தான் சரியான முடிவு என்று நான் சொல்ல மாட்டேன். அது உங்கள் முடிவு!” என்று கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

  ரூ. 3 லட்சம் பணப்பெட்டியுடன் வந்து சில மணி நேரங்கள் உரையாடிவிட்டு சென்ற நடிகர் சரத்குமாருக்கு ரூ.10 லட்சம் சம்பளம் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றுவரை 3 லட்ச பணப்பெட்டி 9 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால் ஹவுஸ்மேட்ஸ் யாரும் அந்த பணத்தை எடுத்துச்செல்லவில்லை.

  இதையும் படிங்க.. வளர்த்து விட்ட சேனலை இப்படி சொல்லலாமா? விஜய் டிவி பாவனாவை திட்டும் ரசிகர்கள்!

  இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் 11 லட்ச ரூபாய் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை அமீர் எடுக்கப்போவதாக முதலில் தெரிவித்துள்ளார். பின்னர், சும்மா பிராங்க் செய்தேன் என போட்டியாளர்களை ஏமாற்றியுள்ளார். இருப்பினும், இன்று பெட்டியை எடுத்துக்கொண்டு சிபி வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Actor sarath kumar, Bigg Boss Tamil 5, Vijay tv