தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சோகத்தில் இருக்கும் சரஸ்வதிக்கு அதிர்ச்சி தருகிறார் தமிழ். மனைவியின் கனவை நிறைவேற்ற தமிழின் இந்த முயற்சி சந்திரகலாவுக்கு தெரியாதவரை எந்த பிரச்சனையும் இல்லை.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லி சந்திரகலாவின் கனவே கோதை அம்மாவின் குடும்பத்தை பிரிப்பது தான். அதனால் தான் தமிழ் மற்றும் சரஸ்வதியை மீண்டும் வீட்டுக்குள் சேர விடக்கூடாது என்று பல சூழ்ச்சிகளை செய்தார். ஆனால் கடைசியில் நடந்தததே வேறு. கோதை அம்மா, தமிழ் - சரஸ்வதியை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். இப்போது அனைவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். ஆனாலும் தமிழ் -
சரஸ்வதியிடம் யாரும் முன்பு போல் பேசுவது இல்லை. இப்போது அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் மூத்த மருமகள் வசு தான். ஆனால் தன்னுடைய மகளே அவர்களுக்கு துணை போவது சந்திரலேகாவுக்கு பிடிக்கவில்லை.
இதையும் படிங்க..மறுபடியும் அழகான பெண் குழந்தை.. மகிழ்ச்சி வெள்ளத்தில் சன்டிவி சீரியல் பிரபலம்!
எதாவது ஒரு காரணம் கிடைக்காதா என தேடி கொண்டிருக்கிறார். காதல் கல்யாணத்தை நடத்த தமிழும் சரஸ்வதியும் சேர்ந்து சொன்ன பொய் கல்யாணம் முடிந்த அடுத்த கணமே மொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது. கோதை அம்மா ஆஸ்பிட்டலில் சேரும் அளவுக்கு போய் விட்டது. இப்படியொரு பொய் சொன்னதால் மொத்த குடும்பத்துக்கும் தமிழ் மற்றும் சரஸ்வதி மீது அப்படி ஒரு வெறுப்பு.
இதையும் படிங்க.. என்ன மீனா இப்படி பண்ணிடீங்க? அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!
எந்த பொய் சொல்லி அனைவரின் பாசத்தை இழந்தேனோ அதை உண்மையாக்க வேண்டும் என்று நினைக்கிறார்
சரஸ்வதி. அதாவது எம்.பி.ஏ படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இதற்கு முதலில் அவர் 12வகுப்பு பாஸ் செய்ய வேண்டும். அந்த தேர்வை எழுத வேண்டும் என முடிவு எடுக்கிறார். இதைப்பற்றி தமிழுக்கு ஃபோன் செய்து பேசுகிறார். ஆனால் தமிழ், சரஸ்வதி கஷ்டப்படும் படி பேசிவிடுகிறார்.
கடைசியில் நடப்பதோ வேறு. சரஸ்வதிக்கு சர்ப்பிரைஸ் தர, 12ம் வகுப்பு புத்தகத்துடன் வருகிறார் தமிழ். இதைப்பார்த்த சரஸ்வதிக்கு கண்ணீர் தாங்க முடியவில்லை. தனது கனவுக்கு துணையாக நிற்கும் கணவரை நினைத்து பெருமை கொள்கிறார். அதுமட்டுமில்லை ஆனந்த கண்ணீரில் அவரலால் பேச முடியவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.