கோபமாக இருந்த தனது மாமியார் கோதையை சாமர்த்தியமாக வாயடைக்க வைத்திருக்கிறாள் சரஸ்வதி. தற்போது அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டி.வி-யில் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இதில் பிரபல சீரியல் நடிகர் தீபக் தமிழ் கேரக்டரிலும், சரஸ்வதி கேரக்டரில் பிரபல டிவி தொகுப்பாளரும்,
சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா நாகேஷும் நடித்து வருகின்றனர்.
தொழிலால் படிப்படியாக வளர்ந்த ஹீரோ குடும்பம், அவர்களை போட்டியாக நினைத்து தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள துடிக்கும் வில்லி குடும்பம், படித்த வாத்தியார் குடும்பத்தில் படிக்காமல் இருக்கும் ஹீரோயின் இவர்களுக்கு நடக்கும் மோதல், காதல், பாசம், பழிவாங்கும் படலம் ஆகியவையே தமிழும் சரஸ்வதியும் கதைக்களம்.
சரஸ்வதியுடன் தமிழுக்கு திருமணம் நடந்த பின்னர் தான் அவள் படிக்காதவள் என்ற விஷயம் தமிழ் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வில்லி சந்திரகலா, கிடைக்கும் கேப்பில் எல்லாம் கிடா வெட்டுகிறார்.
4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!
எந்த எம்.பி.ஏ படித்ததாக கோதை நம்பினாரோ, அதை உண்மையிலேயே படித்து கோதையின் கோபத்தை போக்குவது என்ற முடிவுக்கு வரும் சரஸ்வதி, 12-ம் வகுப்பு தேர்வை மிகவும் கவனமுடன் எழுதுகிறாள். இதற்கிடையே ஒரே வீட்டில் இருந்தாலும் தமிழையும், சரஸ்வதியையும் குடும்பத்தினர் ஒதுக்கி வைத்திருப்பது சரஸ்வதியின் பாட்டிக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமாகும் பாட்டி, வழியில் கோதையைப் பார்த்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
ரிஷிபாலா முதல் சிம்ரன் பாகா வரை!
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ‘எவ்வளவு தைரியம் இருந்தா அந்தம்மா இப்படியெல்லாம் பேசுவாங்க. என் வாழ்க்கைல இந்த மாதிரி அவமானத்தை நான் சந்திச்சதே இல்ல’ என கோதை ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருக்கும் போதே, தமிழும் சரஸ்வதியும் வீட்டுக்குள் வருகிறார்கள். ’யாரெல்லாம் இந்த வீட்டுக்கு ஆகாதவங்களோ அவங்க கூட எல்லாம் கொஞ்சி குலாவிட்டு வர்றீங்க’ என கோதை கேட்க, ‘பாட்டி கோயில்ல என் கிட்ட பேசினத சொல்ல வர்றீங்களா? பாட்டி ஒரு லூசு. பாட்டி என் கிட்ட பேச வந்தப்போ, உங்கக் கூட பேச மாட்டேன்னு அத்தை, மாமாவுக்கு வாக்கு குடுத்துருக்கேன். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவங்க ஏத்துக்குற வரைக்கும் பேச மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்’ என கோதையை சமாளித்த சந்தோஷத்தில் இடத்தை காலி செய்கிறாள் சரஸ்வதி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.