• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சரியான நேரத்தில் சின்னத்திரைக்கு குட் பாய்... மேக்கப் ஆர்டிஸ்டாக உயர்ந்து நிற்கும் சந்தோஷி!

சரியான நேரத்தில் சின்னத்திரைக்கு குட் பாய்... மேக்கப் ஆர்டிஸ்டாக உயர்ந்து நிற்கும் சந்தோஷி!

சின்னத்திரை நடிகை சந்தோஷி

சின்னத்திரை நடிகை சந்தோஷி

மரகத வீணை சீரியலில் நடித்த ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  • Share this:
    சின்னத்திரையில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகை சந்தோஷி குட் பாய் சொல்லி விட்டு மேக்கப்பில் கவனம் செலுத்தி இன்று மிகப் பெரிய தொழில் முனைவராக உயர்ந்து நிற்கிறார்.

    90கிட்ஸ்களின் ஃபேவரெட் சாங்கான ‘சின்ன நெஞ்சிலே’ பாடல் இப்போது டிவியில் பார்த்தால் கூட சந்தோஷியை சைட் அடிக்காதவர்கள் இல்லை. முஸ்லீம் பெண்ணாக முகத்தில் ஒரு முடியை எடுத்துவிட்டு கொண்டு படம் முழுக்க செம்ம க்யூட்டாக இருப்பார். ‘உனக்கும் எனக்கும்’ படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான ‘நுவ்வோஸ்டானந்தே நேனோடந்தனா’ படத்தில் நடித்து நந்தி விருதை சொந்தமாக்கினார். அடுத்து பாபா’ படத்தில் மனீஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

    also read சென்னையில் இருந்ததால் தான் எனக்கு இது நடந்தது.... கண்ணான கண்ணே ப்ரீத்தி ஷேரிங்ஸ்!

    தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சின்னத்திரையில் நுழைந்தார். சீரியல்களில் ஹீரோயின் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்தார். சந்தோஷி நடித்த வாழ்க்கை, ’ருத்ர வீணை, அரசி, ’இளவரசி சீரியல்களில் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சீரியல்கள் ஆகும். சீரியலில் நடிக்கும் போதே தன்னுடன் மரகத வீணை சீரியலில் நடித்த ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு சின்னத்திரையில் இருந்து முழுவதுமாக வெளியேறி அவர், மேக்கப் ஆர்டிஸ்ட் கலையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

    கணவருடன் சந்தோஷி


    அதன் விளைவாக தற்போது ப்ளஷ் பொட்டிக் அண்ட் பியூட்டி லாஞ்ச் என பெண் தொழில் முனைவோராகவும் மிளிர்கிறார். அவ்வப்போது மேக்கப் ஆர்டிஸ்ட் பயிற்சியும் கொடுத்து வருகிறார். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்ததால் சினிமா பிரபலங்களை அடிக்கடி அழைத்து மேக் அப் ஷூட் நடத்துவார். இன்று இவரின் மேக்க அப் பயறச்சி கூடத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். லாக்டவுன் காலத்தில் ஆன்லைனிலேயே தனது பணியைத் தொடர்ந்தார். பல பெண்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்கிறார். சமீபத்தில் தனது ட்வின்ஸ் பேபிகளின் ஃபோட்டோவையும் வெளியிட்டு இருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: