Home /News /entertainment /

தான் கர்ப்பம்... தங்கைக்கு கல்யாணம்... மொட்டை அடித்துக் கொண்ட சஞ்சனா கல்ராணி

தான் கர்ப்பம்... தங்கைக்கு கல்யாணம்... மொட்டை அடித்துக் கொண்ட சஞ்சனா கல்ராணி

சஞ்சனா கல்ராணி

சஞ்சனா கல்ராணி

பார்ப்பவரின் கண்களில் தான் அழகு என்பது இருக்கிறது. அதனால் நான் என் தலைமுடி முழுவதையும் தியாகம் செய்தேன்.

    சினிமா துறையில் இருக்கும் பலரும் தங்களின் அழகுக்கு அதிக கவனம் செலுத்துவார்கள். திரையில் தனது முக அழகும், உடல் அழகும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக பாதுகாப்பாக பராமரித்து வருவார்கள். அதே போன்று உடலில் அதிக எடை போட்டு விட கூடாது என்பதற்காகவும் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் நடிகர்கள் உடல் கட்டுமஸ்தாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்மிற்கு சென்று உடல் அழகை பராமரித்து வருவார்கள்.

    அதே போன்று சினிமா துறையில் உள்ள நடிகைகளும் தங்களின் முக அழகுக்கும், உடல் அழகுக்கும் அதிக முக்கியத்துவத்தை தருவார்கள். குறிப்பாக முடி மற்றும் முகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருவார்கள். இவை எதையும் கண்டு கொள்ளாமல் தனது இயற்கையான முகமும், முடியும் அழகே என்று நினைக்க கூடிய நடிகைகளும் சிலர் உண்டு.

    இதை வெளிக்காட்டும் தனது தலை முடியயையே முழுவதுமாக நீக்கி உள்ளார் பிரபல நடிகையின் சகோதரி. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நிக்கி கல்ராணி. இவரின் அழகிய நடிப்பிற்கென்று பல ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தான் இவருக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.

    Beast: முன்பதிவிலேயே வசூல் சாதனை செய்த விஜய்யின் பீஸ்ட்!

    நிக்கி கல்ராணியை போன்றே அவரது சகோதரியான சஞ்சனா கல்ராணியும் கன்னடம் மற்றும் தமிழில் நடித்து உள்ளார். சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள இவர் போதை பொருள் வழக்கில் சில காலங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். தற்போது சிறையில் இருந்த இவர் ஜாமீன் கிடைத்த பிறகு வெளியில் வந்துள்ளார். கடந்த வருடம் திருமணம் செய்துக் கொண்ட அவர் தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இந்நிலையில் இவர் திடீரென தலையை மொட்டை அடித்து கொண்ட போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளார். தான் மொட்டை அடித்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!

    அதில், "பார்ப்பவரின் கண்களில் தான் அழகு என்பது இருக்கிறது. அதனால் நான் என் தலைமுடி முழுவதையும் தியாகம் செய்தேன். நான் கடவுளிடம் என் மனதை முழுவதுமாக கொடுப்பதற்கு இதை செய்துள்ளேன். எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்த பிறகு... வாழ்க்கை தற்போது அழகாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் நான் இப்படியாக இருக்க விரும்புகிறோம். எனக்கு கடவுள் கொடுத்த அனைத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா , அஹம் பிரம்மாஷ்டமி" என்று இதற்கான முழு விளக்கத்தையும் சஞ்சனா கல்ராணி குறிப்பிட்டுள்ளார்.




    இந்த புகைப்படத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போன்று ஏன் இப்படி மொட்டை அடித்து கொண்டீர்கள் என்று பல ரசிகர்களும் கேட்டு வருகின்றனர். எதுவாக இருந்தாலும் சஞ்சனா தனக்கு பிடித்தவாறு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை தவறு எதுவும் இல்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி