பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் வெங்கட் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான திரைப்படங்களில் நடிகர் விஜய்யின் நண்பராக துணை வேடங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் சஞ்சீவ். ரீலி ல் மட்டுமின்றி ரியலிலும் இவர் விஜயின் நண்பர் தான். 2002-ல் 'மெட்டி ஒலி' தொடரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார்.
பல எதிர்மறை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, முதல் முறையாக 'திருமதி செல்வம்' (2007-2013) சீரியலில் ஹீரோவாக நடித்தார். அது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தத் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சஞ்சீவ், தனது நடிப்புக்காக பாராட்டுகளையும் பெற்றார்.
தற்போது கிழக்கு வாசல் சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். சீரியலை தயாரிக்கும் ராதிகா சரத்குமாரும் இதில் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார். கிழக்கு வாசல் சீரியல் பற்றி நடிகை ரேஷ்மா பேசுகையில், “ராதிகா சரத்குமார் மேம், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானது” என்றார்.
உங்க வாழ்க்கைல குணசேகரன் இல்லைன்னா... எதிர்நீச்சல் ஹரிப்ரியா ஷேரிங்ஸ்!
பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாகக் நடித்த ரேஷ்மா இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சஞ்சீவ் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சீரியலுக்கு வருகிறார். கிழக்கு வாசல் சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.