முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இப்படியொரு பொன்னான வாய்ப்பை நிராகரித்த சஞ்சீவ்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இப்படியொரு பொன்னான வாய்ப்பை நிராகரித்த சஞ்சீவ்!

சஞ்சீவ்  வெங்கட்

சஞ்சீவ் வெங்கட்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சன் டிவியின் டாப் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

வெள்ளித்திரை நடிகர்களை பலருக்கும் பிடித்திருக்கும். அவர்களின் பிரபலமான நடிப்பு திறன் இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. சில நடிகர்களால் வெள்ளித்திரையில் சிறந்த முறையில் தனது திறனை வெளிக்காட்ட முடியாவிட்டாலும் சின்னத்திரையில் பட்டையை கிளப்பும் அளவிற்கு நடிப்பார்கள். இதன்மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுவர். இந்த வரிசையில் சின்னத்திரை பிரபலம் சஞ்சீவும் அடங்குவார்.

இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரைக்கு வந்த பிறகு தான் இவர் பிரபலம் ஆனார். இவரின் இயல்பான நடிப்பும், குடும்ப பாங்கான பேச்சும் மக்களை கவர்ந்தது இதற்கு முக்கிய காரணமாகும். சஞ்சீவ் பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது புது பரிமாணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

விஜய் டிவியின் டாப் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5ல் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தார். சஞ்சீவ் பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்கிறார் என்ற தகவல் வெளியானதும் பல சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். மேலும் அவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இதை ட்ரெண்டிங் ஆக்கினர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சில வாரங்கள் நன்றாக விளையாடினார். ஆனால் அதன் பிறகு மற்ற போட்டியாளர்கள் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் தான் சஞ்சீவ் பிக் பாஸில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க.. விதவிதமான போஸில் ரசிக்க வைக்கும் பார்வதி நாயர்..

இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. சஞ்சீவிற்கும் கூட இது பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும். இதை விடவும் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று தற்போது வந்துள்ளது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சன் டிவியின் டாப் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதைக் கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலில் சின்ராசு கதாபத்திரத்தில் நடித்து வந்த தமன் குமார் சீரியலில் இருந்து ஒரு சில காரணங்களால் திடீரென்று விலகினார். இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சஞ்சீவ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சஞ்சீவ் அந்த பொன்னான வாய்ப்பை நிராகரித்துள்ளார். எனவே, அந்த வாய்ப்பு ஜீ தமிழ் சீரியல் புகழ் ஸ்ரீகுமாருக்கு சென்றுள்ளது.

இதையு,ம் படிங்க.. ’ஓ சொல்றியா மாமா’ பாடல் ரிகர்சல்.. வைரலாகும் புகைப்படம்

இந்த சீரியல் டி.ஆர்.பியில் நல்ல ரேட்டிங்கைப் பெற்று கொண்டிருக்கிறது. இப்படியொரு நல்ல சீரியல் வாய்ப்பை சஞ்சீவ் நிராகரித்து விட்டாரே என்று பலர் அதிர்ச்சியில் உள்ளனர். பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு, இந்த வாய்ப்பை ஏன் நிராகரித்தோம் என்கிற எண்ணம் சஞ்சீவிற்கும் வந்திருக்க கூடும். எது எப்படியோ, சஞ்சீவ் போன்ற முன்னணி சின்னத்திரை நடிகர்களுக்கு இது போன்ற பல வாய்ப்புகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5, TV Serial, Vijay tv