Home /News /entertainment /

மீண்டும் சீரியலுக்கு வரும் நடிகர் விஜய்யின் தோஸ்த் சஞ்சீவ்!

மீண்டும் சீரியலுக்கு வரும் நடிகர் விஜய்யின் தோஸ்த் சஞ்சீவ்!

சஞ்சீவ் வெங்கட்

சஞ்சீவ் வெங்கட்

கடைசியாக பிக் பாஸ் சீசன் 5ல் சஞ்சீவ் என்ட்ரி கொடுத்து இருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ட நாள் முதல் தொடரில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் சஞ்சீவ் வெங்கட்

    வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் கண்ட நாள் முதல். இதயத்தை திருடாதே சீரியலைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கலர்ஸ் தமிழ் உடன் இணைந்து நடிகர் நவீன் இந்த சீரியலில் குமரன் ரோலில் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக நீதானே என் பொன்வசந்தம் அனு, நந்தினி ரோலில் நடிக்கிறார்.

    இதை யாரும் எதிர்பார்க்கல.. முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்!

    .விதியின் திருப்பத்தால், குமரன் நந்தினியை திருமணம் செய்து கொள்கிறான். இந்தநிலையில் குமரனுக்கும் நந்தினிக்கும் இடையே காதல் மலர்கிறதா அல்லது அவர்கள் ஒருவரையொருவர் விட்டு பிரிகிறார்களா? என்பது தான் சீரியலின் ஒன்லைன். தற்போது சீரியலில் குமரனின் அக்கா அர்ச்சனா கோபத்தில் அம்மா வீட்டில் இருக்கிறார். ஒருபக்கம் நந்தினியும் அமெரிக்கா செல்ல ரெடியாகி விட்டார். இப்படி இருக்கையில் குமரனை பார்க்க நந்தினி வீட்டுக்கு வர, அர்ச்சனா திருடன் வந்து விட்டான் என குமரனை வர வைக்கிறார். கடைசியில் அக்காவுக்கு தெரியாமல் நந்தினியை காப்பாற்ற குமரன் நினைக்கிறார்.



    மெளன ராகம் 2 சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. பொண்ணு யாரு தெரியுமா?

    ஆனாலும் அர்ச்சனாவிடம் நந்தினி மாட்டிக் கொள்கிறார். சீரியல் ஒருபக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் நடிகர் சஞ்சீவ். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலமான சஞ்சீவ், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும்.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    கடைசியாக  பிக் பாஸ் சீசன் 5ல் சஞ்சீவ் என் ட்ரி கொடுத்து இருந்தார். இவரின் மனைவி ப்ரீத்தாவும் தற்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சீவ் கண்ட நாள் முதல் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் அவர் என்ட்ரி கொடுக்க போகும் எபிசோடுக்காக காத்திருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி