ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என் கணவர் தலையெழுத்து எப்படி மாறப்போகிறதோ? பிக் பாஸ் சஞ்சீவ் மனைவியின் பதற்றத்திற்கு என்ன காரணம்?

என் கணவர் தலையெழுத்து எப்படி மாறப்போகிறதோ? பிக் பாஸ் சஞ்சீவ் மனைவியின் பதற்றத்திற்கு என்ன காரணம்?

பிக் பாஸ் சஞ்சீவ்

பிக் பாஸ் சஞ்சீவ்

சஞ்சீவ் தன்னை தயார்படுத்தி கொள்ளும் வீடியோவை அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் வெங்கட் உள்ளே சென்றுள்ளார். 

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் தற்போது வெற்றி நடைபோடுகிறது. 50 நாட்களை கடந்து, 6 போட்டியாளர்கள் வெளியேறி நிலையில் சிலர் வைல்டு கார்ட்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். வைல்டு கார்டில் வருபவர்களின் மீது ரசிகர்களுக்கு எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருப்பதுண்டு. அந்த வகையில் இந்த ஐந்தாவது சீசனில் ரீஎண்ட்ரியாக பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா முதல் வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் வந்தார். அவரை தொடர்ந்து கோரியோகிராபர் அமீர் இரண்டாவது வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.

இந்நிலையில் மூன்றாவது வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் வெங்கட் உள்ளே சென்றுள்ளார். சின்னத்திரையில் பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் சஞ்சீவ். இவர் தனது குடும்ப பாங்கான நடிப்பினால் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருவதற்கு முன் சஞ்சீவ் தன்னை தயார்படுத்தி கொள்ளும் வீடியோவை அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சஞ்சீவ், அவரது மனைவி, அவருடைய சகோதரிகள் மற்றும் அவரது சின்னத்திரை நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சஞ்சீவ் கலந்து கொள்வது பற்றி அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீடியோவில் பேசிய சஞ்சீவ், "பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள எல்லோரும் நன்றாக விளையாடுகிறார்கள். தற்போது அந்த வீட்டுக்குள் செல்ல போகும் நான் நானாக இருக்க விரும்புகிறேன். எல்லா மனிதர்களை போலவும் எனக்கும் கோபம் வரும். அதே போன்று பாசமும் இருக்கும். என்னிடம் பாசத்தை காட்டுபவர்கள் மீது நான் பாசத்தை காட்டுவேன். கோபத்தை வெளிக்காட்டுபவர்கள் மீது கோபத்தை வெளி காட்டுவேன். நான் ஒரு கண்ணாடி மாதிரி" என்று தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)மேலும் சஞ்சீவின் மனைவி பிரீத்தி குறிப்பிடும்போது, "வீட்டில் எப்படி என் கணவரை ரசிக்கிறேனோ அதே போன்று பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் சென்ற பிறகும் நான் அவரை ரசிக்க நினைக்கிறேன். ஆனால் எப்படி தலையெழுத்து மாறப்போகிறது என்று தெரியவில்லை என அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். சஞ்சீவின் பிக் பாஸ் எண்ட்ரி அவரின் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் சஞ்சீவிற்கு ஆதரவான கருத்துக்களை இவரின் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

சின்னத்திரையில் சஞ்சீவ் எப்படி நமது மனங்களை வென்றாரோ அதே போன்று பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் எல்லோரின் மனதையும் வெல்வார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம். இனி பிக் பாஸ் வீட்டுக்குள் மேலும் பல திருப்பங்களையும் நாம் காணலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5, Vijay tv