கயல் சீரியல் நடிகர் சஞ்சீவ் சமீபத்தில் வாங்கிய விருது படத்தைப் பதிவிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அவரது மனைவி ஆல்யா மானசா.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வருபவர் ஆல்யா மானசா. அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். காதலுக்கு ஆல்யாவின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழவே, வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவை கரம் பிடித்தார்.
இவர்களுக்கு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமானார். விஜய் டிவி-யின் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவ், அந்த
சீரியல் முடிந்துவிடவே சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ சீரியலில் நடித்து வருகிறார்.
கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன் குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டும் நபராக கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கயல் மற்றும் அவளுடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் அவரை காதலிக்கும் எழிலை சுற்றியும் கயல் சீரியலின் கதைந கர்கிறது. இந்த சீரியலில் கயலாக பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். எழிலாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.
Dhanush: ஐஸ்வர்யாவுடன் ஏற்பட்ட பிரிவு... குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் தனுஷ்!

ஆல்யா ஸ்டோரி
தங்கள் சேனலில் இருப்பவர்களை ஊக்குவிக்க, சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட முன்னணி
சேனல்கள் விருது விழாக்களை நடத்துகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்பு சன் குடும்ப விருதுகள் விழா நடைப்பெற்றது. அதில் நட்சத்திர நாயகன் விருதை தட்டிச் சென்றிருக்கிறார் சஞ்சீவ். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஆல்யா மானசா, விருது வாங்கிய தனது கணவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதோடு, தானும் தனது குழந்தைகள் அய்லா மற்றும் அர்ஷ் மூவரும் இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.