Home /News /entertainment /

ஆல்யாவிற்கு சஞ்சீவ் கொடுத்த அசத்தல் கிப்ட்... இப்போ இதான் ட்ரெண்டாம்!

ஆல்யாவிற்கு சஞ்சீவ் கொடுத்த அசத்தல் கிப்ட்... இப்போ இதான் ட்ரெண்டாம்!

ஆல்யா மானசா - சஞ்சீவ்

ஆல்யா மானசா - சஞ்சீவ்

ஆல்யாவிற்கு அவ்வப்போது ஸ்பெஷல் மற்றும் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பதை சஞ்சீவ் வழக்கமாக வைத்திருக்கிறார்.

    சின்னத்திரையில் ஜோடிகளிலேயே பிரபலமானது ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி. சீரியல்களில் நடிக்கும் சில ஜோடிகள் நிஜ வாழ்வில் இணைவது ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெறுகிறது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியாலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஆல்யா மானசா.

    ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருந்த நடிகை ஆல்யா - சஞ்சீவ் ஜோடியின் திருமணம் 2019-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சோஷியல் மீடியாவான இன்ஸ்டா மூலமே தங்களுக்கு திருமணமான விஷயத்தை இந்த ஜோடி அறிவித்தது.

    ராஜா ராணி சீரியல் முடியும் தருவாயில் கர்ப்பமாக இருந்த ஆல்யா மானசாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு சீரியலில் இருந்து பிரேக் எடுத்த ஆல்யா யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி ஐலாவுடன் விளையாடுவது, ஷாப்பிங் செல்வது போன்ற விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு ராஜா ராணி சீசன் 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

    விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - உற்சாகத்தில் ரசிகர்கள்!

    மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா, சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். முதல் குழந்தையின் பிறந்த நாளோடு ஆல்யா மானசாவின் வளைகாப்பும் நடந்தது. இன்னும் சில தினங்களில் குழந்தை பிறந்துவிடும் என்ற நாள் வரும் வரை தொடர்ந்து நடித்து வந்த ஆல்யா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் சீரியலில் இருந்து பிரேக் எடுத்தார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்யா மானசாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கணவர் சஞ்சீவ் அறிவித்தார். அதோடு தனது மகனுக்கு அர்ஷ் என்றும் பெயர் வைத்துள்ளனர். இதனையடுத்து சோசியல் மீடியாவில் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

    ஆல்யாவிற்கு அவ்வப்போது ஸ்பெஷல் மற்றும் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பதை சஞ்சீவ் வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது இரண்டாவது குழந்தை பெற்றுள்ள ஆல்யாவிற்கு சஞ்சீவ் கொடுத்துள்ள அசத்தல் கிப்ட் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக அம்மா மற்றும் குழந்தையின் பாசப்பிணைப்பை பொக்கிஷமாக பாதுகாக்கும் வண்ணம் தாய் பாலில் நினைவு பரிசுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இரவில் பாலக்காடு கோயில் விசிட்... கவனம் பெறும் அஜித் புகைப்படங்கள்!



     




    View this post on Instagram





     

    A post shared by alya_manasa (@alya_manasa)






    அந்த ட்ரெண்ட்டை பின்பற்றி ஆல்யாவிற்கு அவருடைய கர்ப்ப கால நிறைமாத வயிறை அச்சாக செய்து, அதனை நினைவு பரிசாக கொடுத்துள்ளார் சஞ்சீவ். இதில் மற்றொரு ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால் இந்த Baby Bump அச்சில் ஆல்யா மானசாவின் தாய் பாலும் கலக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் மூலம் மோதிரம், நெக்லஸ், டாலர் என செய்து கொண்டிருந்த நிலையில், தற்போது ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதியின் புது ஐடியா சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Shalini C
    First published:

    Tags: Alya Manasa

    அடுத்த செய்தி