Home /News /entertainment /

பிக் பாஸிலிருந்து வெளியே வந்த உடனே சஞ்சீவ் யாரை சந்தித்தார் தெரியுமா?

பிக் பாஸிலிருந்து வெளியே வந்த உடனே சஞ்சீவ் யாரை சந்தித்தார் தெரியுமா?

பிக் பாஸ் சஞ்சீவ்

பிக் பாஸ் சஞ்சீவ்

சஞ்சீவ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருந்தாலும் நன்கு விளையாடி வந்தார். தனது கருத்துக்களை நேரடியாக கூறி வந்த நிலையில் குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

    விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 88 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். பின்னர் அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் வெளியேறினர்.

    இதையும் படிங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ரஹ்மான் நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

    இதனிடையே முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகை தந்தார். இவரை தொடர்ந்து சஞ்சீவ் மற்றும் அமீர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தனர். ஆனால் அபிஷேக் ராஜா வந்த இரண்டாவது வாரத்திலேயே மீண்டும் வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. அதில் வருண் மற்றும் அக்ஷ்ரா ஒரே நாளில் வெளியேறினர்.

    இதனை தொடர்ந்து கடந்த வாரம் ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவ்னி, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 8 போட்டியாளர்களும் நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார். அதன்படி வாக்குகள் நடைபெற்று நிலையில் கடந்த வார இறுதி நிகழ்ச்சியில் முதல் நபராக ராஜு காப்பற்றப்பட்டார்.

    இதையும் படிங்க.. சிவாங்கி முதல் நயன்தாரா வரை.. துபாயை சுற்றி வரும் பிரபலங்கள்..

    அவரை தொடர்ந்து பிரியங்கா, நிரூப், பாவ்னி, தாமரை காப்பற்றப்பட்டனர். இறுதியாக சஞ்சீவ், சிபி இருந்த நிலையில் சஞ்சீவ் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். சஞ்சீவ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருந்தாலும் நன்கு விளையாடி வந்தார். தனது கருத்துக்களை நேரடியாக கூறி வந்த நிலையில் குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஞ்சீவ் வெளியேறிய நிலையில், அவரது குடும்பத்தினர் வரவேற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில் சஞ்சீவுடன், வருண் மற்றும் அக்ஷ்ரா எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சஞ்சீவ் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வீட்டைவிட்டு வெளியேறிய கையோடு வருண் மற்றும் அக்ஷாராவை சந்தித்துள்ளது இந்த புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி