வீரப்பன் வாழ்க்கையை மையப்படுத்தி விரைவில் வெளியாகிறது வெப்சீரிஸ்..

வீரப்பன்

வீரப்பன் வெப் சீரிஸ் தொடர்பாக 'ஆதித்ய வர்மா' தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • Share this:
  சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை பற்றி ஒரு வெப் சீரிசும், ஓடிடி தளங்களில் படைப்புகளும் தயாராகி வருகின்றன.

  முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் எழுதிய Chasing the Brigand புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் சீரிஸ் தயாராகிறது. ஆதித்ய வர்மா படத்தை தயாரித்த E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

  இந்தப் படைப்புகளில் பணியாற்றும் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் முகேஷ் மேதா தெரிவித்துள்ளார்.

  மேலும், புத்தகத்தில் கூறியுள்ள அனைத்துத் தகவல்களுமே காப்புரிமையின் கீழ் வருகிறது. அதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் முகேஷ் மேத்தா.
  Published by:Vaijayanthi S
  First published: