ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹோம் டூர்.. இவ்வளவு பெரிய பெட்ரூமா? பிக் பாஸ் சம்யுக்தாவின் பிரம்மாண்ட வீடு!

ஹோம் டூர்.. இவ்வளவு பெரிய பெட்ரூமா? பிக் பாஸ் சம்யுக்தாவின் பிரம்மாண்ட வீடு!

சம்யுக்தா

சம்யுக்தா

மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சம்யுக்தா தனது ரூமை ரசிகர்களுக்கு சுற்றி காட்டுகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் சம்யுக்தாவின் பிரம்மாண்ட் ரூம் வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இந்த பெட்ரூம் டூர் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாய் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

  பிக் பாஸ் சீசன் 4 முன்னாள் போட்டியாளரும், பிரபல மாடலுமான சம்யுக்தா தற்போது வெள்ளித்திரையில் பயங்கர பிஸி. இவர் நடிப்பில் அடுத்து காபி வித் காதல் திரைப்படம் வெளிவரவுள்ளது. இதுத்தவிர மாடலிங், பிசினஸ் என சூப்பர வுமனாக வலம் வருகிறார் சம்யுக்தா. இடையில் கிடைக்கும் நேரத்தில் யூடியூப் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவரும் கொரோனா காலத்தில் யூடியூப் பக்கம் வந்தவர். இப்போது ’சம்யுக்தா சான்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ரன் செய்கிறார். இதில் குக்கிங், மேக்கப், டிராவல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சம்யுக்தா எலைட் லைஃப் வாழ கூடியவர் என்பது அவரின் வீடு, உடை மற்றும் அவரின் வருமானம் குறித்து வெளியான தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் ரூம் டூர் வீடியோ பார்ப்பவர்களின் கண்களையும் விரிய செய்துள்ளது.

  இந்த வயசில் எனக்கு 23 வயது பெண்ணுடன் திருமணமா? உண்மையை உடைத்த பப்லு பிரித்விராஜ்!

  இவ்வளவு காட்ஸ்லியான ரூம் டூரா? என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர் ரசிகர்கள். மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சம்யுக்தா தனது ரூமை ரசிகர்களுக்கு சுற்றி காட்டுகிறார். இதை ;சாமின் ரூம் டூர் ;என்ற பெயரில் வீடியோவாக யூடியூப்பில் வெளியிடுள்ளார். 2 பெட்ரூம்களை இணைத்து ஒரே பெட்ரூமாக செட் செய்துள்ளார். அதில் 2 பிக் சைஸ்  பெட்கள், பெரிய ஸ்மார்ட் டிவி, வார்ட் போர்ட், 2 பாத்ரூம்கள் என எல்லாமே பிரம்மாண்டம் தான்.

  ' isDesktop="true" id="824684" youtubeid="05jW-vkgnxQ" category="television">

  அதே போல் ரூம்களில் நிறைய கேஜட்ஸ்களை சம்யுக்தா நிரப்பி வைத்துள்ளார். அண்மையில் வயலின் கிளாஸ் சென்று இருக்கிறார். அதற்காக வாங்கிய வயலினையும் ரூமில் வைத்துள்ளார். காட்ஸ்லி டைல்ஸ், மார்பல்ஸ் என ரூமில் இருக்கும் பொருட்களின் பிராம்மாண்ட  முதற்கொண்டு அனைத்து விவரங்களை அப்படியே ஒப்பிக்கிறார். சிலர் இந்த வீடியோவை ரசித்து இருந்தாலும் பலரும் சம்யுக்தாவின் இந்த காஸ்ட்லி ரூம் டூரை ட்ரோல் செய்துள்ளனர். அதுமட்டுமில்லை எப்பவும் சம்யுக்தா தன்னிடம் இருக்கும் எலைட் பொருட்களை காட்டவே இதுப்போன்ற வீடியோக்களை வெளியிடுவதாகவும் அவர்கள் கமெண்டில் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 4, Vijay tv