4 வருடங்கள் முன்னோக்கி நகர்ந்த சில்லுனு ஒரு காதல் - இன்ஸ்டாவில் உற்சாகத்தை வெளிப்படுத்திய நடிகர்கள்!

சில்லுனு ஒரு காதல்

போலீஸ் சீருடையில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கும் நடிகர் சமீர் அகமது, "போலீஸ் சீருடை அணிவது எப்போதும் மரியாதைக்குரியது.

  • Share this:
கலர்ஸ் தமிழில் சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன என்றாலும் இந்த சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது "சில்லுனு ஒரு காதல்" மெகா சீரியல்.

ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த சீரியலில் ஹீரோவாக நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிகர் சமீர் அகமது, ஹீரோயினாக சுட்டி பெண் வேடத்தில் நடிகை தர்ஷினி கவுடா நடித்து வருகின்றனர். சூரிய குமார் என்ற கேரக்டரில் நடிகர் சமீர் அகமது, கயல்விழி கேரக்டரில் தர்ஷினி கவுடா நடித்து ரசிகர்களை கவர்ந்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்களை தவிர ஸ்ரீலதா, ரேகா ஏஞ்சலினா, வித்யா சந்திரன், ஷியமந்தா கிரண், நாதன் ஷியாம் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். சில்லுனு ஒரு காதல் சீரியல் இந்த ஆண்டு ஜனவரி 4 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ராஜேஷ், ராகவி, சிங்கமுத்து, சஞ்சனா சிங், அபிராமி வெங்கடாசலம், சோனா, மிமிக்ரி கலைஞர் சேது சுப்ரமணி உள்ளிட்ட பலர் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது 4 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக காட்டப்படுகிறது. நேற்றைய எபிசோடிலிருந்து (செப்டம்பர் 13) "சில்லுனு ஒரு காதல்" சீரியலின் கதை 4 வருடம் முன்னோக்கி நகர்ந்து நடக்கும் சம்பவங்கள் ஒளிபரப்பாகிறது.

தாங்கள் நடிக்கும் சீரியலின் இந்த புதிய துவக்கம் குறித்து சோஷியல் மீடியாவில் நடிகர் சமீர் அகமது மற்றும் நடிகை தர்ஷினி கவுடா ஆகியோர் உற்சாகம் தெரிவித்து உள்ளதுடன், ரசிகர்கள் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தருமாறும் கேட்டு கொண்டுள்ளனர். 4 வருடங்கள் முன்னோக்கி செல்லும் கதை என்றாலும் நடிகர்கள் யாரையும் மாற்றவில்லை சீரியல் தயாரிப்பு குழு. மாறாக பல விறுவிறுப்பான சுவாரசியம் நிறைந்த காட்சிகளை இனிவரும் எபிசோட்களில் ஒளிபரப்ப உள்ளனர். 
View this post on Instagram

 

A post shared by DARSHINI GOWDA (@darshinigowda01)


இதனிடையே இன்ஸ்டாவில் "சில்லுனு ஒரு காதல்" சீரியலின் புதிய தொடக்கம் பற்றிய ப்ரமோவை ஷேர் செய்துள்ள தர்ஷினி கவுடா "வாழ்க்கை என்பது இயற்கையான மற்றும் தன்னிச்சையான மாற்றங்களின் தொடர்.. இது 4 ஆண்டுகளுக்குப் பிறகான கதை.. நீங்கள் புதிய கயல் மற்றும் சூர்யாவை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். எங்களை வாழ்த்துங்கள்" என்று ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Starboy 🌟 (@sameer_starboy)


போலீஸ் சீருடையில் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கும் நடிகர் சமீர் அகமது, "போலீஸ் சீருடை அணிவது எப்போதும் மரியாதைக்குரியது. புதிய ஆரம்பம், புதிய மாற்றம், புதிய நான்" என்று உற்சாகமாக ஷேர் செய்து இருக்கிறார். கமலாவின் சதியால் ஏற்படும் மோதல்கள் காரணமாக கயலை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் சூரிய குமார்.

Also read... சமந்தா போட்ட ட்வீட் - சமாதானமடைந்த ரசிகர்கள்!

இதனை தொடர்ந்து 4 வருடங்கள் முன்னோக்கி சென்று தொடரும் கதையில் போலீஸ் பயிற்சி அகாடமியில் கயலை பார்க்கும் சூர்யா அதிர்ச்சி அடைவது போல கதை தொடர்கிறது. கடும் முயற்சிகளுக்கு பிறகு கயல் ஒரு போலீஸ் அதிகாரி ஆவது போலவும், அதன் பின்னர் இருவரின் வாழ்க்கையில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படும் என்பதை மையமாக வைத்தும் இனிவரும் எபிசோட்கள் ஒளிபரப்பாக உள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published: