ஹாலிவுட்டை சேர்ந்த யானிக் பென் சமந்தாவின் யசோதா திரைப்படத்தில் ஆக்சன் கோரியோகிராபர் ஆக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சமந்தா அதிகளவு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அவரது நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இதைத்தவிர இரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய்யின் பீஸ்ட் பாடலை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்ன செய்தார் தெரியுமா?
தெலுங்கில் அவர் நடித்திருக்கும் சாகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. புராண கதையை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்துள்ளனர். இதில் சகுந்தலையாக சமந்தா நடித்துள்ளார். இதையடுத்து சமந்தா நடிப்பில் பான் - இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக தயாராகும் படம் யசோதா.
விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!
இதில் டைட்டில் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார் முக்கியமான வேடத்தில் நடிக்க வரலட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஹரி மற்றும் ஹரீஷ் (ஹரி சங்கர், ஹரீஷ் நாராயண்) இணைந்து இந்தப் படத்தை இயக்குகிறார்கள். ஸ்ரீதேவி மூவிஸ்
படத்தை தயாரிக்கிறது தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படத்தை வெளியிடுகிறார்கள். சென்ற வருட இறுதியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

சம்முடன் யானிக் பென்
மணிசர்மா இசையமைக்கும் இந்தப் படத்தில் ஆக்சன் காட்சிகளை அமைக்க ஹாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட்
மாஸ்டர் யானிக் பென்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்தான் சமந்தாவுக்கு சண்டை பயிற்சி அளித்து வருகிறார். இந்தப் படத்திற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் யசோதா திரைப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்து வருகிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.