Salman Khan: ஒரே நாளில் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகும் சல்மான் கான் படம்!

Salman Khan: ஒரே நாளில் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகும் சல்மான் கான் படம்!

ராதே

சல்மான் கான் நடித்துள்ள புதிய படம் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகிறது. திரையரங்கில் வெளியாகும் அதேநாள் இப்படம் ஓடிடி-யிலும் வெளியாகிறது.

  • Share this:
    சல்மான் கான் நடித்துள்ள புதிய படம் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகிறது. திரையரங்கில் வெளியாகும் அதேநாள் இப்படம் ஓடிடி-யிலும் வெளியாகிறது.

    கொரோனா தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில், பட வெளியீடுகளை தயாரிப்பாளர்கள் தள்ளி வைத்துள்ளனர். திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வர மாட்டார்கள் என்று அச்சம். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அந்த பயம் இல்லை. வெடிகுண்டு வீசினாலும், விஷவாயு கசிந்தாலும் திரையரங்கில் ரசிகர்கள் திரள்வார்கள். இல்லையெனில் மகாராஷ்டிரா முழு அடைப்பில் இருக்கையில் மே 13-ம் தேதி சல்மான் கான் திரைப்படம் வெளிவருமா?

    சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கியிருக்கும் படம் ராதே. ரம்ஜான் பிரியாணிக்கு நிகராக இந்தி ரசிகர்களுக்கு முக்கியமானது சல்மான் கான் படம். அவரும் முடிந்தளவு ரம்ஜானில் தனது படம் வெளியாகும்படி பார்த்துக் கொள்வார். அப்படித்தான் ராதே படமும் தயாரானது. மே 13-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இதில் சல்மான் கானுடன் திஷா பதானி, ரந்தீப் ஹுடா, ஜாக்கி ஷெராஃப், மேகா ஆகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர், இயக்கம் பிரபுதேவா. சல்மான் கான், சோகையில் கான், அதுல் அக்னிகோத்ரி இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.

    கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து பல மாநிலங்கள் முழுநேர மற்றும் இரவுநேர ஊரடங்கு அறிவித்துள்ளதால் ராதே திட்டமிட்டபடி மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது. அப்படியொரு சந்தேகமே வேண்டாம் என்பது போல் மறுபடியும் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர். திரையரங்குகளுக்கு வர முடியாத ரசிகர்கள் வருந்த வேண்டாம், உங்களுக்காகவே மே 13-ம் தேதி அன்று ஸீ பிளக்ஸ் மற்றும் ஸீ 5 ஓடிடி தளங்களில் இப்படம் வெளியாகிறது.

    இந்தியாவில் அதிகம் வசூல் செய்யும் சல்மான் கானின் படமே, ஓடிடி-யில் வெளியாவதால் மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. மே 13-ம் தேதி ராதே திரைக்கு வருவதையொட்டி, நாளை படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: