முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சக்தியுடன் வருணை சேர்த்து வைக்க கார்த்திக் கிருஷ்ணா படும் கஷ்டம்!

சக்தியுடன் வருணை சேர்த்து வைக்க கார்த்திக் கிருஷ்ணா படும் கஷ்டம்!

மெளன ராகம்

மெளன ராகம்

மெளன ராகம் 2வில் வருணுக்கு உதவ கார்த்திக் கிருஷ்ணா வந்து இருக்கிறார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மெளன ராகம் சீரியலில் பிரிந்து இருக்கும் சக்தி - வருணை சேர்த்து வைக்க பாடாய் படுகிறார் சக்தியின் அப்பா கார்த்திக் கிருஷ்ணா. ஒருவகையில் சக்தியும் வருணும் பிரிவதற்கு காரணமே இவர் தான் என்பதால், அந்த குற்றணர்ச்சியில் எப்படியாவது இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என போராடுகிறார்.

மெளன ராகம் சீரியலை பொறுத்தவரையிம் இப்போது முக்கியமான கட்டம் சக்தி மாமா பழனி வைத்திருக்கும் போட்டியில் வருண் ஜெயிப்பது. இந்த பாட்டு போட்டியில் வருண், சக்தியுடன் சேர்ந்து அரை மணி நேரம் பாட  வேண்டும் அப்படி பாடி விட்டால் போதும் சக்தியை சென்னைக்கு அனுப்புவதாக பழனி சவால் விடுகிறார். அந்த சவாலை வருணும் ஏற்றுக் கொள்ள இப்போது வருணுக்கு பாட்டு சொல்லி கொடுக்கிறார் கார்த்திக் கிருஷ்ணா.

எதிர் நீச்சல் சீரியலில் அந்த நடிகை விலகவில்லை.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

இந்த விஷயத்தில் வருணுக்கு உதவ கார்த்திக் வந்து இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்த உடனே சக்திக்கு சந்தோஷம் தாங்கல. உடனே தனது அப்பாவிடம் ஓடி வந்து பேசியவர், தனது தவறுக்கு மன்னிப்பும் கூறினார். வருணால் பிரிந்து இருந்த சக்தியும் கார்த்திக் கிருஷ்ணாவும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். இதனால் வருணும் ஹேப்பி. ஆனால் பழனிக்கு வருண் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியம். இடை இடையில் சக்தியின் அத்தை சொர்ணம் வருணை வந்து பார்த்து ஆறுதலாக பேசிவிட்டு செல்கிறார். மொத்தத்தில் அனைவருமே வருண் ஜெயித்து, சக்தியை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும் என நினைக்கின்றனர்.

கூடிய விரைவில் அது நடக்க போகுது.. சித்தி 2 கவின் குறித்து வெளியான குட் நியூஸ்!

இந்த விஷயம் சக்தியின் அம்மா மல்லிகாவுக்கும் தெரிய வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வருணை அடித்து வெளுத்து எடுக்கிறார் கார்த்திக். எவ்வளவு சொல்லி கொடுத்தும் வருணுக்கு பாட வரவில்லை. இதனால் வாத்தியார் போல் குச்சி எடுத்து வருணை கார்த்திக் கிருஷ்ணா பிழிந்து எடுக்கிறார். அடி தாங்க முடியாமல் வருண் கத்துகிறார். சக்தி வேண்டும் என்றால் பாடு என்று கூற, அடியை வாங்கி கொண்டு மீண்டும் பாட தயாராகுகிறார் வருண்.

' isDesktop="true" id="767585" youtubeid="VW33Ak8JmZA" category="television">

இதை எல்லாம் ஓரமாக நின்றபடி பழனி கவனிக்கிறார், கார்த்திக் கிருஷ்ணா வருணுக்கு உதவ வந்து இருப்பது பழனிக்கு பிடிக்கவில்லை. அதே நேரம் அவர் வருண், சக்திக்கு போட்டியாக பாட மாட்டார் என  நம்புகிறார். வருண் எப்படி இந்த போட்டியில் ஜெயித்து சக்தியுடன் ஊருக்கு செல்கிறார் என்பதை பார்க்க தான் ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Television, TV Serial, Vijay tv