Home /News /entertainment /

வருணுடன் சேர்ந்த சக்திக்கு இப்படியொரு சோகமா! கதறி அழும் மல்லிகா

வருணுடன் சேர்ந்த சக்திக்கு இப்படியொரு சோகமா! கதறி அழும் மல்லிகா

மெளன ராகம்

மெளன ராகம்

கார்த்திக் கிருஷ்ணா, சத்யாவை பார்த்தப்படியே மயக்கத்தில் கண்ணை மூடுகிறார்.

    மெளன ராகம் சீரியலில் வருணுடன் சேர்ந்த சக்திக்கு அடுத்த அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. இதுக் குறித்த பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    பிரிந்து இருந்த சத்யாவும் வருணும் இப்போது சேர்ந்து விட்டனர். பழனி வைத்த சவாலில் வருண் ஜெயித்து விட்டார். சத்யாவுடன் சேர்ந்து 30 நிமிடம் பாடி மொத்த ஊரையும் ஆச்சரியப்பட வைத்தார். கடைசியில் சத்யா, வருணுடன் வீட்டுக்கு செல்வதாக கூறி விடுகிறார். மனோகர், வருண், தருண் என எல்லோருக்கும் பயங்கர சந்தோஷத்தில் உள்ளனர். ஆனால் ஷீலாவும் ஸ்ருதியும் இதை எதிர்பார்க்கவில்லை. வருண் இப்படி பாடுவார் என்று யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் கார்த்திக் கிருஷ்ணா தான்.

    7 பக்கத்திற்கு கடிதம்.. மகளால் உடைந்து அழுத விஜய் டிவி ஆங்கர் அர்ச்சனா!

    வருணுடன் சத்யாவை சேர்த்து வைக்க கார்த்திக் கிருஷ்ணா, வருணுக்கு சங்கீதம் சொல்லி கொடுத்தார். முதலில் ஸ்ருதியிடம் பாட்டு கற்றுக் கொண்ட வருண் சரியாக பாடவில்லை. ஆனால் கார்த்திக் கிருஷ்ணா வருணை பாட வைத்தார். இதனால் வருண், கார்த்திக் கிருஷ்ணாவுக்கு நன்றி கடன்பட்டுள்ளார். மேடையில் வருண் ஜெயித்ததும் அவருக்கு சந்தோஷம் தாங்கல. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

    அவருக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு.. சர்ச்சைக்கு பதில் சொன்ன பிக் பாஸ் இசைவாணி!

    சத்யாவை ரவுடி கத்தியால் குத்த வர, அந்த நேரம் பார்த்து கார்த்திக் கிருஷ்ணா விரைந்து ஓடி சத்யாவை காப்பாற்றுகிறார். இதனால் ரவுடி கார்த்திக் கிருஷ்ணாவை குத்தி விடுகிறார். இத்தனை வருஷமாக கார்த்திக் கிருஷ்ணாவை சார் என அழைத்து வந்த சக்தி, அப்பா என கத்துகிறார். கார்த்திக் கிருஷ்ணா, சத்யாவை பார்த்தப்படியே மயக்கத்தில் கண்ணை மூடுகிறார். இந்த பக்கம் ஸ்ருதியும் டாடி என கத்துகிறார்.



    வருண், மல்லிகா, தருண், மனோகர், சொர்ணம், பழனி என எல்லோரும் கார்த்திக் கிருஷ்ணாவை பார்த்து கதறுகின்றனர். ஆஸ்பிட்டல் தூக்க ஆட்களை அழைக்கின்றனர். அந்த ரவுடியை அனுப்பியது காதம்பரி. ஸ்ருதி கண்காட்டிய பின்பு தான் ரவுடி,  சத்யாவை கொலை செய்ய வந்தார். ஆனால் அதற்குள் கார்த்திக் கிருஷ்ணா அதை பார்த்து அவரை காப்பாற்றி தனது உயிரை பணயம் வைக்கிறார். அடுத்து கார்த்திக் கிருஷ்ணாவுக்கு என்ன நடக்கும்? ஸ்ருதி, காதம்பரி பற்றிய உண்மை தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி