முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ன பிரச்னை? திடீரென விலகிய நடிகை.. பரபர இன்ஸ்டா பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ன பிரச்னை? திடீரென விலகிய நடிகை.. பரபர இன்ஸ்டா பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலக நடிகை சாய் காயத்ரி கூறிய காரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி அறிமுகமே தேவையில்லை. இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் சீரியல். அதுமட்டுமில்லை .டி.ஆர்.பியில் தொடர்ந்து நல்ல ரேட்டிங்கில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சின்ன ரோலில் நடித்தால் கூட போதும் உடனே அவர்கள் சின்னத்திரையில் பிரபலமாகிவிடுவார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது 1150 எபிசோடிகளை தொட இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை பல நடிகர்கள் மாறிவிட்டார்கள்.

குறிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை மூன்று நடிகைகள் மாறிவிட்டனர். அதே போல ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் மூன்று பேர் மாறி இருக்கின்றனர். ஆரம்பத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிகை வைஷாலி நடித்து வந்தார். அவரை தொடர்ந்து விஜே தீபிகா நடித்து வந்தார். இந்த நிலையில் பிஜே தீபிகா இந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருந்த நேரத்தில் தான் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகிவிட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து வெளியேறுகிறேன். காரணம் அந்த கதாப்பாத்திரம் எனக்கு ஏற்றதாக இல்லை. இனி சீரியலில் வரும் கதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அது எனக்கும் என் வருங்கால பணிக்கும் சரியானதாக நான் உணரவில்லை. இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மேலும் எனது இந்த முடிவினை மதித்த விஜய் டிவிக்கு நன்றி எனவும் சாய் காயத்ரி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Pandian Stores, TV Serial