கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இதயத்தை திருடாதே 2 சீரியல் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சீரியல் புரமோவை பார்த்து ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.
டாப் சேனல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகி வருகிறது இதயத்தை திருடாதே நெடுந்தொடர். . இந்த சீரியலில் ஹீரோயினாக நடிகை ஹிமா பிந்து, சஹானா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் நவீன் குமார், சிவா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் சீசனில் சிவா, சஹானா இடையிலான கல்யாணம், காதல் ஒளிபரப்பான நிலையில், தற்போது இரண்டாவது சீசனில் 6 வருடங்களுக்கு பிறகு ஆரம்பிப்பது போல் ஒளிபரப்பாகி வருகிறது.
சிவா - சஹானாவை சேர்த்து வைக்க வேண்டும் என்பது அவர்களின் செல்ல மகள் ஐஷூ குட்டியின் ஆசை. ஆனால் தனது மகளுக்காக மட்டுமில்லை யாருக்காகவும் சேர போவதில்லை என்கிறார் சஹானா. இப்படி இருக்கையில், சஹானாவின் தந்தையாக சோமசுந்தரம் ரோலில் நடித்து வருபவர் இறந்து விடுவது போல் புரமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சஹானாவின் தந்தையான இவர், பள்ளி ஆசிரியர், தனது மகளுக்காக அவருடன் எல்லா இடத்திலும் துணையாக நிற்பார். அதே போல், சிவாவையும் எந்த இடத்திலும் விட்டு கொடுக்கமாட்டார். அவருக்கும், சிவா, சஹானாவுடன் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது.
சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் பர்த்டே கொண்டாட்டம் – வைரலாகும் போட்டோக்கள்!
View this post on Instagram
இப்படி இருக்கையில், ஏற்கெனவே சிவாவுக்கு அருணாவுடன் மோதல் அரங்கேறி வருகிறது. இந்த பிரச்சனை ஒருபக்கம் இருக்கையில், கோயிலுக்கு சென்ற சஹானா அப்பா, அங்கையே மயங்கி விழுகிறார். அவரின் ஃபோனில் இருந்து மாப்பிள்ளை சிவாவுக்கு கால் செய்து, தகவல் தெரிவிக்கப்படுகிறது. பதறி அடித்துக் கொண்டு சிவா அங்கே சென்று, மாமனாரை ஆஸ்பிட்டல் அழைத்து செல்கிறார். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.
ஹெலிகாப்டரில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர்
சிவாவுக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. சஹானா இந்த அதிர்ச்சியை எப்படி தாங்க போகிறார் என நினைத்து அவர் கண்கலங்குகிறார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.