ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எஸ்ஏ 20 இன்றைய ஆட்டத்தில் வெல்லப்போவது யார்? கலர்ஸ் தமிழில் காணுங்கள்!

எஸ்ஏ 20 இன்றைய ஆட்டத்தில் வெல்லப்போவது யார்? கலர்ஸ் தமிழில் காணுங்கள்!

எஸ்ஏ20 மேட்ச்

எஸ்ஏ20 மேட்ச்

மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் மற்றும் 21 பந்துகளை மீதம் வைத்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி கண்டது. கைல் மேயர்ஸ் ஆல்-ரவுண்ட் திறனை வெளிப்படுத்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் முக்கியமான பேட்ஸ்மேனான டெவால்ட் ப்ரீவிஸ் ஆட்டமிழக்கச் செய்ததுடன் இலக்கை துரத்திய போது அற்புதமான தொடக்கம் கொடுத்து 148 ஸ்டிரைக் ரேட்டுடன் விரைவாக 34 ரன்களை சேர்த்து அசத்தினார் கைல் மேயர்ஸ்.

கைல் மேயர்ஸின் செயல்திறன் தொடர்பாக வயகாம் 18 ஸ்போர்ட்ஸ் நிபுணர் பிரக்யான் ஓஜா கூறும்போது, “கரீபியன் ஆல்ரவுண்டரான கைல் மேயர்ஸ் தான் களமிறங்கும் ஒவ்வொரு அணிக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுதான் அவர், இந்தியாவில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருப்பதற்கு காரணம். இந்த அணியின் நீட்சிதான் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ். அவர்கள், கைல் மேயர்ஸ் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அதை அவரும் சாத்தியமாக்கி உள்ளார்” என்றார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ஸ்டோனின் செயல்திறன் குறித்தும் ஓஜா தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். ஆலி ஸ்டோன் நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மாயாஜாலம் செய்த போதிலும் அவரது அணியை வெற்றிக் கோட்டைத் தாண்டி அழைத்துச் செல்ல முடியவில்லை.

இதுகுறித்து ஓஜா கூறும்போது, “ஆலி ஸ்டோன் 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த விக்கெட்டுகளை அவர் கைப்பற்றிய சூழ்நிலைகளை பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அவருக்கு பந்து வழங்கப்படும் போது, அவர் தனது கேப்டனுக்காக சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்தார். அணியில் உள்ள பிரதானமான இரு பந்து வீச்சாளர்கள் ஆட்டத்துக்குள் இல்லை என்பதை ஆலி ஸ்டோன் அறிந்திருந்தார். அதனால் அவர், சிறந்த திறனை வெளிப்படுத்த விரும்பினார், அவர் நிகழ்த்தியும் காட்டினார். துரதிர்ஷ்டவசமாக, அவரால் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்க முடியவில்லை. ஆனால் தனது பந்துவீச்சால் எதிரணி போனஸ் புள்ளியை பெறாமல் இருப்பதை உறுதி செய்தார்” என்றார்.

இந்த படமெல்லாம் இங்கதான் இருக்கா? அமேசான் ஓடிடியில் இருக்கும் அசத்தலான படங்கள்!

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் – சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்டன் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டங்கள் ஜியோ சினிமா, ஸ்போர்ட்ஸ் 18, ஸ்போர்ட்ஸ் 18 கேல் மற்றும் கலர்ஸ் தமிழில் நேரலை செய்யப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்