முகப்பு /செய்தி /entertainment / SA20 பரபரப்பான ஆட்டங்களை கலர்ஸ் தமிழில் நேரலையில் கண்டு மகிழுங்கள்!

SA20 பரபரப்பான ஆட்டங்களை கலர்ஸ் தமிழில் நேரலையில் கண்டு மகிழுங்கள்!

SA20 போட்டி

SA20 போட்டி

போட்டியின் இறுதி ஆட்டம் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

SA20 லீக்கின் இரண்டாம் கட்ட ஆட்டத்தை பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்புகிறது.

ஒரு வார கால இடைவெளிக்குப் பிறகு வயகாம் 18-ன் தமிழ் சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பார்வையாளர்கள் கண்டு மகிழ தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டியின் பரபரப்பான இரண்டாம் கட்டத்தின் ஆட்டத்தை பிப்ரவரி 2, 2023 முதல் நேரலையில் ஒளிபரப்புகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர்களான அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் அபினவ் முகுந்த் வர்ணனையாளர்களாக (Commentators) பங்கேற்கும் இப்போட்டியை, பிரபல தமிழ் தொகுப்பாளினி காயத்ரி சுரேஷ் தொகுத்து வழங்குகிறார்.

அடுத்த இரண்டு வாரங்களில் 11 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன் உள்ள டி20 லீக்கில் ஒவ்வொரு அணியும் அந்ததந்த அணியின் வெற்றி புள்ளிக்கு ஏற்ப தலா 2 அல்லது 3 முறை விளையாடுகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி வரை ஆறு அணிகளும் மோதவுள்ளது. அதன்பின் பிப்ரவரி 8ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 9ஆம் தேதி அரையிறுதி போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின் இறுதி ஆட்டம் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறும். டேவிட் மில்லர், ஃபாஃப் டு பிளெசிஸ், ககிசோ ரபாடா, குயின்டன் டி காக், தீக்ஷனா, லியாம் லிவிங்ஸ்டன், ஜேசன் ஹோல்டர் போன்ற சர்வதேச நட்சத்திர வீரர்களின் அதிரடி ஆட்டத்தை பார்வையாளர்கள் கண்டு மகிழ ஆர்வமாக உள்ளனர்.

பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் MI கேப் டவுனுக்கு எதிராக விளையாடுகிறது, அதைத் தொடர்ந்து பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் Vs பார்ல் ராயல்ஸ் மற்றும் இரவு 8.30 மணிக்கு டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிராக சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் விளையாடுகிறது. இதேபோல், பிப்ரவரி 4ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு MI கேப்டவுனுக்கு எதிராக பிரிட்டோரியா கேபிடல்ஸ் மோதுகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் இரவு 8.30 மணிக்கு பிரிட்டோரியா கேபிடல்ஸ் vs டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடுகிறது.

SA20 போட்டி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் MI கேப் டவுன் இடையேயான போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் இடையேயான போட்டி பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 மற்றும் பிப்ரவரி 9 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டிகளையும், பிப்ரவரி 11ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டிகளையும் காண, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை ட்யூன் செய்யுங்கள்.

SA20 போட்டி

தென்னாப்பிரிக்க டி20லீக் போட்டியின் இரண்டாம் கட்ட ஆட்டத்தை பிப்ரவரி 2 முதல் உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள். அனைத்து ஆட்டங்களையும் ஜியோ சினிமா (Jiocinema), ஸ்போர்ட்ஸ்18 (Sports18) மற்றும் கலர்ஸ் தமிழ் (Colors Tamil) தொலைக்காட்சியில் காணலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்