முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குக் வித் கோமாளி - 4... இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா?

குக் வித் கோமாளி - 4... இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா?

கிஷோர், ஷெரின், காளையன்

கிஷோர், ஷெரின், காளையன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி - 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்து இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. கடந்த 3 சீசன்களும் மெகா ஹிட் கொடுத்த நிலையில் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் 4-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக ரக்‌ஷன் தொடர்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக் முதல் கோமாளிகள் வரை பெரும்பாலானோர் அடுத்தடுத்து வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றி வருவதாலும், பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி வேண்டாம் என நினைப்பவர்கள் கூட, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சியில் இந்த முறை 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறியுள்ளார். இவருடன் நடிகை சிருஷ்டி டாங்கே, பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியா என பத்து போட்டியாளர்கள் உள்ளனர்.

கோமாளிகளாக முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேசி, சுனிதா, மணிமேகலை, தங்கதுரை ஆகியோர் உடன் புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிச சிவா, ஓட்டேரி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முதல் வாரத்தில் சிறப்பாக சமையல் செய்து நடிகை விசித்ரா நடுவர்களின் பாராட்டை பெற்றார். அதனை தொடர்ந்து இரண்டாவது வாரமான இம்யூனிட்டி வாரத்தில் நடிகர் விஷால் சிறப்பாக சமையல் செய்து வரும் வாரத்திற்கான எலிமினேஷனில் இருந்து விலக்கு பெற்றுள்ளார்.

' isDesktop="true" id="888303" youtubeid="XnigYZM0HjA" category="television">

இதனை தொடர்ந்து வரும் வாரத்தில் மீதம் உள்ள 9 போட்டியாளர்கள் இடையே போட்டிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடியோவில் இறுதியாக எலிமினேஷன் டாஸ்கிற்காக கிஷோர், ஷெரின், காளையன் ஆகியோர் இருக்கின்றனர். ஆகையால் அந்த 3 பேரில் யார் சரியாக சமைக்கவில்லையோ அவர் தான் போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv