• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Roshni Haripriyan: ரசிகர்களிடம் ‘சாரி’ கேட்ட ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் - காரணம் என்ன தெரியுமா?

Roshni Haripriyan: ரசிகர்களிடம் ‘சாரி’ கேட்ட ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் - காரணம் என்ன தெரியுமா?

ரோஷினி ஹரிப்ரியன்

ரோஷினி ஹரிப்ரியன்

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தான் விலகியது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரோஷினி ஹரிப்ரியன்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட்டாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

    இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

    இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயத்தை மருத்துவர் மூலம் தெரிந்துக் கொண்ட கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை தேடி அலைகிறாள். பின்னர் ஒருவழியாக தனது இன்னொரு குழந்தை ஹேமா என்ற விஷயம் அவளுக்கு தெரிய வருகிறது.

    இந்த உண்மை எப்போது பாரதிக்கு தெரிய வரும்? அவன் எப்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பான் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்ற டிக்டாக் பிரபலம், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)






    இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தான் விலகியது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன். அதில், ”வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க? சில காரணங்களால் என்னால் “பாரதி கண்ணம்மா” சீரியலில் தொடர முடியவில்லை. நான் எடுத்த முடிவு உங்களை புண்படுத்தியிருந்தால், உங்கள் அனைவரிடமும் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் இந்த உயரத்தை எட்டியிருக்க முடியாது. எதிர்காலத்திலும் நீங்கள் எனக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி” எனக் கூறியிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: