• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Roshni Haripriyan: பாரதி கண்ணம்மா ரோஷினியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Roshni Haripriyan: பாரதி கண்ணம்மா ரோஷினியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரோஷினி ஹரிப்ரியன்

ரோஷினி ஹரிப்ரியன்

சமீபத்தில் ரோஷினி ஹரிபிரியனுக்கு மிகவும் பொருத்தமான கதையுடன் இயக்குனர் ஒருவர் இவரை அணுகி இருக்கிறார்.

  • Share this:
    சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி-யில் இரவு 9 - 9.30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா.

    மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் மேயாத மான் திரைப்படத்தில் நடிகர் வைபவின் நண்பராக நடித்த நடிகர் அருண் பிரசாத் பாரதி கேரக்டரில் நடித்து வருகிறார். கண்ணம்மா கேரக்டரில் பிரபல மாடலான நடிகை ரோஷினி ஹரிபிரியன் நடித்து வருகிறார். மாடலிங் துறையில் பிரபலமாக இருந்த இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானார்.

    இன்னும் சொல்ல போனால் இன்ஸ்டா மூலம் தான் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தனது யதார்த்தமான நடிப்பு மற்றும் முகபாவனைகள் மூலம் ரசிகர்களின் மனதில் கண்ணம்மா கேரக்டரில் ஆழமாக பதிந்து விட்டார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பெயர் மற்றும் புகழ் வெள்ளித்திரை வாய்ப்புகான கதவை திறந்தது. பல மாதங்களாக சினிமா வாய்ப்புகள் கதவை தட்டியும் இவருக்கு ஏற்ற மற்றும் பிடித்தமான கதை அமையாததால் தொடர்ந்து மவுனம் காத்து வந்துள்ளார்.

    சமீபத்தில் ரோஷினி ஹரிபிரியனுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் ஏற்ற கதையுடன் இயக்குனர் ஒருவர் இவரை அணுகி இருக்கிறார். கதையும், கேரக்டரும் பிடித்து போக உடனே ஓகே சொல்லி விட்டாராம் நடிகை ரோஷினி. ஏற்கனவே இந்த சீரியலில் அகில் கேரக்டரில் நடித்த அகிலனுக்கு வந்த சினிமா வாய்ப்பு காரணமாக சில வாரங்களுக்கு முன்னர் விலகினார். தற்போது அகிலனுக்கு பதிலாக இந்த சீரியலில் சுகேஷ் ராஜேந்திரன் அகில் கேரக்டரில் நடித்து வருகிறார். வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை ஃபரீனா கர்ப்பமாக இருப்பதால், அவர் டெலிவரி முடிந்து வரும் வரை வேறு நடிகையை வெண்பாவாக நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)






    இந்நிலையில் புதிய பட வாய்ப்பால் கண்ணம்மாவாக லீட் ரோலில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன், சீரியலில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதனிடையே கண்ணம்மா கேரக்டரில் நடிக்க துவக்கத்தில் நாளொன்றுக்கு ரூ.15,000 வரை சம்பளம் வாங்கி வந்த நடிகை ரோஷினி, கடந்த சில மாதங்களாக ரூ.20,000 சம்பளம் பெற்று வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பாரதி கேரக்டருக்காக நடிகர் அருண் பிரசாத்தும் ஒரு நாளுக்கு ரூ. 20,000, சௌந்தர்யாவாக நடிக்கும் நடிகை ரூபாஸ்ரீ ரூ.15, 000, நடிகை ஃபரீனா ரூ.10, 000, அஞ்சலியாக நடிக்கும் நடிகை கண்மணி ரூ.9000, நடிகர் ரிஷி கேசவ் ரூ.12,000 சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: