Home /News /entertainment /

குக் வித் கோமாளி 3-ல் ரோஷினி ஹரிப்ரியன் - விஜய் டிவி வெளியிட்ட அட்டகாச ப்ரோமோ!

குக் வித் கோமாளி 3-ல் ரோஷினி ஹரிப்ரியன் - விஜய் டிவி வெளியிட்ட அட்டகாச ப்ரோமோ!

ரோஷினி ஹரிப்ரியன்

ரோஷினி ஹரிப்ரியன்

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி, படங்களில் நடிப்பதற்காக சில மாதங்கள் முன்பு சீரியலை விட்டு வெளியேறினார்.

    குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்ரியன் கலந்துக் கொள்வதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமையல், காமெடி இரண்டையும் கலந்து செய்த கலவையான இது பலரையும் வாய் விட்டு சிரிக்க வைத்தது.

    முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனின் வெற்றியாளராக கனி அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து சமீபத்தில் இதன் ப்ரோமோ வெளியானது. அதில் முந்தைய சீசனில் இடம்பெற்ற கோமாளிகளில் புகழை தவிர, எல்லோரும் இடம்பெற்றிருந்தனர். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கலந்துக் கொள்ள மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கட்டாயம் அவர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார் என தெளிவுப்படுத்தினார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செஃப் தாமு.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். இதில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்ரியன் போட்டியாளராகக் கலந்துக் கொள்வார் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக ரோஷினி ஹரிப்ரியன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொள்ளும் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

    மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்



    பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி, படங்களில் நடிப்பதற்காக சில மாதங்கள் முன்பு சீரியலை விட்டு வெளியேறினார். இதனால் சோகத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிச்சயம் மகிழ்ச்சி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி