• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல்... நம்பியவர்களை ஏமாற்றினாரா ரோஷினி?

பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல்... நம்பியவர்களை ஏமாற்றினாரா ரோஷினி?

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவே பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகியுள்ளார்.

  • Share this:
    ஒவ்வொரு வாரமும் டிஆர்பி-யில் போட்டி போட்டுக்கொண்டு முதலிடம் பிடிக்கும் விஜய் டிவி சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் தான். ஆனால், கடந்த சில வாரங்களாக பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி வரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டு வந்தது சீரியல் குழுவுக்கு வருத்தத்தை தந்துள்ளது. ஏனெனில், டிஆர்பி வரிசையில் பாரதி கண்ணம்மா சீரியல் எப்போதும் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்திருக்கும். ஆனால், இந்த முறை டாப் 5-ல் கூட இடம்பெறவில்லை. இதற்கு காரணம் ரோஷினி சீரியலை விட்டு விலகியது தான் என்று கூறப்படுகிறது.

    விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் ஓடிக்கொண்டிருந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரட் எனலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த சீரியலில் இதுவரை கண்ணமாகவாக நடித்து வந்தவர் தான் ‘ரோஷினி ஹரிப்ரியன்’. இவர் சீரியலில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்த செய்தி பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீரியலில் கண்ணம்மாவாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் கண்ணம்மாவாகவே வாழும் நடிகை ரோஷினி சீரியலை விட்டு விலகுவதை ஏற்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் கருத்துக்களும் வெளியாகின.

    வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவே பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகியுள்ளார். மேலும், தனது கடைசி நாள் ஷூட்டிங்கை நினைவுக்கூறும் விதமாக சீரியல் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதேபோல ரோஷினிக்கு பதிலாக, அவரை போன்ற சாயலில் இருக்கும் வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருப்பினும், சீரியலில் இருந்து ரோஷினி விலகுவதாக தெரிவித்திருந்த நிலையில் டிஆர்பி வரிசையில் கண்ணம்மா சீரியல் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் இப்போது புதுமுகம் நடித்து வரும் நிலையில், சீரியலின் டிஆர்பி நிலை டாப்-10 வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது, பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 7-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் 6 முதல் 12ம் தேதி வரையிலான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் சன் டிவியின் கயல் சீரியல் இருக்கிறது. அது 10.46 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் சுந்தரி சீரியலும், மூன்றாம் இடத்தில் வனத்தைப்போல சீரியலும் இருக்கிறது. இதனை தொடர்ந்து 4-ம் இடத்தை பாக்கியலட்சுமி சீரியலும், 5-ம் இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பிடித்துள்ளது. மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் 8.83 புள்ளிகளுடன் 7ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த டிஆர்பி வெளியான தேதிகளில் ரோஷினி நடித்திருந்தார். அதற்கே இவ்வளவு பின்னடைவு என்றால், புதுமுகம் நடித்த எபிசோடுகளுக்கு ரேட்டிங் என்ன வரப்போகிறதோ என்று சீரியல் குழு புலம்பி வருகிறது. டாப்12 வரிசையில் இடம்பிடித்திருக்கும் சீரியல்களின் முழுபட்டியல் பின்வருமாறு:

    1.கயல்: 10.46
    2.சுந்தரி: 9.97
    3.வானத்தைப்போல: 9.80
    4.பாக்கியலட்சுமி: 9.15
    5.பாண்டியன் ஸ்டோர்ஸ்: 9.13
    6.அபியும் நானும் : 8.88
    7.பாரதி கண்ணம்மா: 8.83
    8.ரோஜா: 8.60
    9.கண்ணான கண்ணே : 8.07
    10.ராஜா ராணி2: 7.71
    11.தமிழும் சரஸ்வதியும்: 6.83
    12. அன்பேவா: 6.78



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: