Home /News /entertainment /

ரோஜா சீரியல் நடிகையின் தாய் பாசத்தை கண்டு பூரித்து போன ரசிகர்கள் கூட்டம்!

ரோஜா சீரியல் நடிகையின் தாய் பாசத்தை கண்டு பூரித்து போன ரசிகர்கள் கூட்டம்!

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

ரோஜா சீரியலில் அனுவாக மறுபடியும் தோன்றும் வாய்ப்புள்ளதா என்பதும் தெரியவில்லை. கூடிய விரைவில் சீரியல்களில் ஷாமிலி நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

  ஒரு சீரியலில் நடிக்கும் பாத்திரங்கள் மிகவும் பொருந்திப் போனால், கனமான கதைக்களம் அமைந்தால், அந்தக் குறிப்பிட்ட பாத்திரமும் அதில் நடித்த நடிகர் அல்லது நடிகையும் மிகப்பெரிய வரவேற்பைப் பெறுவது வழக்கம். ஹீரோ ஹீரோயின்களைத் தவிர்த்து, சீரியல் வில்லன் மற்றும் வில்லிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது பல சேனல்களில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களில் வில்லிகள் ரோலில் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

  ஆதாவது, சீரியலில் வில்லன் பாத்திரம் மீது கடும் அதிருப்தி அல்லது எதிர்ப்பு ஏற்பட்டால் குறிப்பிட்ட நடிகரோ நடிகையோ அந்த பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து வருகிறார் என்பதே அர்த்தம். அந்த வரிசையில் சீரியல் வில்லிகளில் ரோஜா சீரியலில் வில்லி அனுவாக நடித்த நடிகை ஷாமிலி சுகுமாருக்கு ஸ்பெஷல் இடமே உள்ளது. இவர் குழந்தை பிறப்புக்காக சீரியலில் இருந்து விலகி இருந்தாலும், ரசிகர் கூட்டம் குறையவில்லை. இவருடைய பெண் குழந்தையின் முதல் புகைப்படத்தை சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

  இதையும் படிங்க.. cook with comali : புகழ் இடத்தை நிரப்புவார்களா இந்த புதிய 3 கோமாளிகள்? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

  ரோஜா தொடரில் வில்லியாக ஷாமிலி சுகுமார் நடித்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்திருந்தார். சன் குடும்ப தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த வில்லிக்கான விருதை பெற்று அசத்தினார். அந்த எதிர்ப்பு வில்லி பாத்திரத்துக்கு மட்டுமே. ஆனால், நிஜ வாழ்வில் ஷாமிலிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதனால் தான் சீரியலில் இருந்து வெளியேறி சில மாதங்கள் ஆனாலும், ஷாமிலியின் மவுசு குறையவில்லை. பல நடிகர் நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலியின் புகைப்படங்கள், ரீல்ஸ் மற்றும் வீடியோக்களுக்கு பெரிய வரவேற்பும் உள்ளது. இவருடைய வளைகாப்பு, மெட்டர்னிட்டி ஷூட் புகைப்படங்கள் என்று எல்லாமே ரசிகர்களைக் கவர்ந்தது.

  இதையும் படிங்க.. எல்லை மீறும் மீனாவின் வார்த்தைகள்... ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

  சில நாட்களுக்கு முன் தனக்குப் பெண் குழந்தை பிறந்ததை, இளவரசி பிறந்துள்ளதாக ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பதிவில் குழந்தையின் கையின் புகைப்படம் மட்டும் தெரியுமாறு ஒரு பதிவை பகிர்ந்தார். ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். குழந்தை பிறந்து சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தன் குழந்தையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  ‘என் குட்டி பாப்பா ரியா’ என்ற கேப்ஷனோடு ஷாமிலி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவின் லிங்க் இங்கே.   
  View this post on Instagram

   

  A post shared by Shamili Sukumar (@shamili_sukumar)


  ரியா, மஞ்சள் நிற உடலில் தலையில் முடியோடு, முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி பார்ப்பது, கியூட்டாக இருக்கிறது. மீண்டும் எப்போது சீரியலில் நடிக்கத் தொடங்குவார் என்பது பற்றி தற்போது வரை ஷாமிலி எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படியே வந்தாலும், ரோஜாவில் அனுவாக மறுபடியும் தோன்றும் வாய்ப்புள்ளதா என்பதும் தெரியவில்லை. கூடிய விரைவில் சீரியல்களில் ஷாமிலி நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial

  அடுத்த செய்தி