Home /News /entertainment /

கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகைக்கு சிம்பிளாக நடந்த வளைகாப்பு !

கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகைக்கு சிம்பிளாக நடந்த வளைகாப்பு !

ரோஜா சீரியல் வில்லி

ரோஜா சீரியல் வில்லி

ரோஜா சீரியலில் வில்லி அனுவாக என்ட்ரி கொடுத்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரோஜா சீரியலில் வில்லி அனு ரோலில் நடித்த விஜே அக்‌ஷயாவுக்கு வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்களை அக்‌ஷயா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

    சன் டிவியின் டாப் ஹிட் சீரியல் ரோஜா. இந்த தொடருக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு நடிகர், நடிகைகளையும் பிரமிக்க வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஹீரோவாக நடிக்கும் நடிகர் சிபு சூர்யன், ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் நடிகை பிரியங்கா நல்கார் ஆகியோரை ரசிகர்கள் தூக்கி கொண்டாடுகின்றனர். இவர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து சிபு சூர்யன் சீரியலில் இருந்து விலகலாம் என்று எடுத்த முடிவையே மாற்றி விட்டார். அந்த அளவு ரோஜா தொடர் மக்களின் வாழ்வோடு கலந்து விட்டது.



    அதெல்லாம் நம்பாதீங்க.. மகாலட்சுமி ஆடி கார் வச்சி இருக்காங்க! போட்டு கொடுத்த ரவீந்தர்

    ஹீரோ, ஹீரோயினை தாண்டி ரோஜா சீரியலில் வில்லி ரோலும் பலராலும் ரசிக்கப்படுகிறது.இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் அனுவாக பிரபல சீரியல் நடிகை ஷாமிலி சுகுமார் நடித்து வந்தார். இவரின் மிரட்டலான வில்லத்தனத்தால் சீரியல் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களும் ஷாமிலியை திட்டி தீர்த்தனர். இந்த ரோலுக்கு ஷாமிலி சன் டிவி விருதையும் கைப்பற்றினார். சீரியல் பீக்கில் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஷாமிலி சீரியலை விட்டு விலகினார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Akshayaa 👸 (@vjakshaya)






    இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்து இருந்தது. அதை சரிசெய்ய வில்லி அனுவாக என்ட்ரி கொடுத்தார் சன் மியூசிக் விஜே அக்‌ஷயா. கண்ணை உருட்டி உருட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்தார் அக்‌ஷயா. இவரது வில்லத்தனமான நடிப்பால் இவருக்கான ரசிகர் வட்டம் மேலும் பெருகியது. இந்நிலையில் அக்‌ஷயா கடந்த மாதம் தனது 2 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடிய போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு ஷேர் செய்து இருந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Akshayaa 👸 (@vjakshaya)






    அதாவது அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் அத்துடன் மெட்டர்னிட்டி ஃபோட்டோஷூட் படத்தையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் இன்ஸ்டாவில் அக்‌ஷயா தனது வளைகாப்பு புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். பச்சை நிறப்புடவையில் சிம்பிளாக அழகாக நடந்த இவரின் வளைகாப்பு விழா புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி