Home /News /entertainment /

கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை!

கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை!

விஜே அக்‌ஷயா

விஜே அக்‌ஷயா

ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரோஜா சீரியலில் வில்லியாக கலக்கிய விஜே அக்‌ஷயா தனது 2 வது ஆண்டு திருமண நாளில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஷேர் செய்துள்ளார்.

    மக்களின் ஆதரவை பெற்று பல ஆண்டுகளாக தமிழகத்தில் முன்னணி சேனலாக இருந்து வரும் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் ரோஜா. இந்த சீரியலின் விறுவிறுப்பான கதைக்கு  ரசிகர்களின் வரவேற்பு அதிகம் இருப்பதால் சீரியல் ஒளிபரப்பாகும் ப்ரைம் டைமிங்கில் சன் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும் . சன் டிவியில் டாப் ஹிட் சீரியலில் ரோஜா தொடர் முதலிடத்தில் இருக்கிறது.

    சீரியலை விட்டு வெளியே வந்ததும் அப்படியொரு ஃபோட்டோ! அர்ச்சனா என்னதான் சொல்ல வர்றீங்க?

    ரோஜா சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற ரோலில் நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார்.ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் நடிகை பிரியங்கா நல்கார் நடிக்கிறார். வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு கதாபாத்திரங்களின் நடிப்பு முக்கிய காரணமாக உள்ளது. ஹீரோ ஹீரோயினுக்கு அடுத்தப்படியாக வில்லி கதாபாத்திரத்துக்கு இந்த சீரியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    cook with comali: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குக் வித் கோமாளி சந்தோஷ் - சுனிதா!

    இந்த சீரியலில் வில்லி கேரக்டரில் அனுவாக பிரபல சீரியல் நடிகை ஷாமிலி சுகுமார் நடித்து வந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகினார். இதை அடுத்து அனு கேரக்டரில் நுழைந்தார் விஜே அக்‌ஷயா. சன் டிவி-யில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா ஷோ மூலம் ஆங்கராக கலக்கி வந்த விஜே அக்‌ஷயாவிற்கு ஏற்கனவே அதிக ரசிகர்கள் இருந்து வந்தனர். ரோஜாவில் அனுவாக மாறிய பிறகு இவரது வில்லத்தனமான நடிப்பால் இவருக்கான ரசிகர் வட்டம் மேலும் பெருகியது.



     




    View this post on Instagram





     

    A post shared by Akshayaa 👸 (@vjakshaya)






    இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தனது 2 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடிய விஜே அக்‌ஷயா, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். கணவருடன் சிம்பிளாக எடுத்துக் கொண்ட மெட்டர்னிட்டி ஃபோட்டோ ஷூட்டை பகிர்ந்து ”இப்போது எங்கள் குடும்பத்தில் மூவர்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி