Home /News /entertainment /

சன் டிவி சீரியலுக்கு வரும் சூப்பர் ஸ்டார் பட நடிகை!

சன் டிவி சீரியலுக்கு வரும் சூப்பர் ஸ்டார் பட நடிகை!

 ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

புதிய கேரக்டர் அறிமுகம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்த சீரியல் குழுவினர், இதற்கான வேலையில் இறங்கினர்.

    தமிழ் சின்னத்திரையில் உள்ள டிவி சேனல்கள் தினமும் ஏராளமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்து வந்தாலும், சின்னத்திரை ரசிகர்களின் அமோக ஆதரவு எப்போதும் சீரியல்களுக்கு தான் இருந்து கொண்டிருக்கிறது. எனவே தான் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்தியில் வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் சனிக்கிழமை, தினமும் காலை முதல் இரவு படுக்கைக்கு செல்லும் நேரம் வரை சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் தமிழகத்தில் முன்னணி சேனலாக இருந்து வரும் சன் டிவி-யில் காலை 9 மணி முதல் இரவு  11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. மகராசி, திருமகள், பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, அன்பே வா, பூவே உனக்காக, சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவி-யில் காலை அத்திப்பூக்கள், உதிரிபூக்கள் மற்றும் மதியம் 1 மணிக்கு மெட்டிஒலி உள்ளிட்ட பழைய சீரியல்களும் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க.. வில்லியின் ரீஎன்ட்ரியை பாட்டு போட்டு வரவேற்கும் சீரியல் குழு! பாரதி கண்ணம்மா வெண்பா ரிட்டர்ன்ஸ்

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்த சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி. இதில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சீரியலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது ரோஜா. இந்த சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற ரோலில் கர்நாடகாவை சேர்ந்த நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார். ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் ஆந்திராவை சேர்ந்த நடிகை பிரியங்கா நல்கார் நடித்து வருகிறார். இரவு 9 மணி முதல் 9.30 வரை ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சேனலின் மற்ற எந்த சீரியல்களையும் விட ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றிருந்தது.

    நடிகை சோனா


    இந்நிலையில் சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் ரோஜாவை பின்னுக்கு தள்ளி TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் TRP ரேட்டிங்கில் முந்த விறுவிறுப்பான ட்விஸ்ட்கள் ரோஜா சீரியலில் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் புதிய கேரக்டர் அறிமுகம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்த சீரியல் குழுவினர், இதற்கான வேலையில் இறங்கினர்.

    இதையும் படிங்க. பிக் பாஸ் : பாவ்னி, அபிநய் ‌‌‌மற்றும் அமீர் விஷயத்தில் மீண்டும் எல்லை மீறும் கேள்விகள்!

    இந்த முயற்சியில் ரஜினியின் குசேலன் திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகை சோனா ரோஜா சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரோஜா சீரியலில் நடிகை சோனா ஸ்பெஷல் கேரக்டர் ஏதேனும் ஒன்றில் நடிக்க போகிறாரா அல்லது அவருக்காக தனி கேரக்டர் ஏதேனும் ரோஜா சீரியலில் புகுத்தப்பட உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி