Home /News /entertainment /

பூஜாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி! - விறுவிறுப்பின் உச்சத்தில் ரோஜா சீரியல்

பூஜாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி! - விறுவிறுப்பின் உச்சத்தில் ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

Roja Serial Today Episode: இன்றைய எபிஸோட்டில் டிஎன்ஏ டெஸ்டுக்கு பூஜா தயாராகிறார். ஆனால் அவர்களை செல்ல விடாமல் தடுக்க அனு துப்பாக்கியுடன் வழிமறிக்கிறார்.

Sun TV Roja Serial Episode: சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்தத் தொடரில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பல முன்னனி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். வெற்றிகரமாக ஆயிரம் எபிஸோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் தற்போது விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இயக்குநர். 

டைகர் மாணிக்கம், செண்பகத்தின் உண்மையான வாரிசு யார் என்பது வெளிச்சத்துக்கு வரும் தருவாயில், அனு பல்வேறு சதி திட்டங்களை தீட்டுகிறார். மற்றொருபுறம், பூஜா தான்தான் வாரிசு என்ற விஷயத்தை நிரூபித்து அம்மா அப்பாவுடன் மகிழ்ச்சியாக வாழ போராடுகிறார். 

Roja serial
ரோஜா சீரியல்


அன்னபூரணிக்கு, அஸ்வினுக்கும் பூஜாவுக்கும் திருமணம் நடந்த விஷயம் தெரியவந்தபோது  கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பூஜா பாட்டியின் மனதை புண்படுத்த நினைக்கவில்லை என்று வீட்டை விட்டு வெளியேற தயாரானார். அர்ஜுனும் பூஜாவுடன் செல்ல முடிவெடுத்தபோது பாட்டியின் மனம் மாறுகிறது.

இதையும் படிங்க..  மாகாபா ஆனந்த் பங்கு பெற்ற பாரிஸ் நிகழ்ச்சியின் நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பூஜாவுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறார் பாட்டி.  வழக்கம்போல் இந்த விஷயத்தில் அனு மூக்கை நுழைத்து, ஏன் இப்படி செய்றீங்க என்று அனு, பாட்டியிடம் கேட்க, பாட்டி பளார் என்று அனு கன்னத்தில் அறைகிறார்.

roja
ரோஜா சீரியல்


டிஎன்ஏ டெஸ்ட்  முடிவு வரவரைக்கும் தான் உனக்கு மரியாதை என்று எச்சரிக்கைவிடுக்கிறார்.



 

இன்றைய எபிஸோட்டில் டிஎன்ஏ டெஸ்டுக்கு பூஜா தயாராகிறார். ஆனால் அவர்களை செல்ல விடாமல் தடுக்க அனு துப்பாக்கியுடன் வழிமறிக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பூஜா அதிர்ச்சியடைகிறார்.

அனுவை பூஜா எப்படி சமாளித்து வெற்றிகரமாக டி என் ஏ டெஸ்ட் எடுத்து தன்னை நிரூப்பிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்போம்! 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Sun TV, TV Serial, TV Serial Promos

அடுத்த செய்தி