Home /News /entertainment /

ரோஜா சீரியல் டிவிஸ்ட் - நீலாம்பரியாக என்ட்ரி கொடுத்த சோனா!

ரோஜா சீரியல் டிவிஸ்ட் - நீலாம்பரியாக என்ட்ரி கொடுத்த சோனா!

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

ரோஜாவுக்கு பேய் வேடம் போட்டு ஜெயிலில் இருக்கும் அனுவை பயமுறுத்துவது தான் அர்ஜுன் போட்ட மாஸ்டர் பிளான். அந்த பெண் அதிகாரி எப்படி போலீஸ் ஆனார் என்பதும், அர்ஜுன் எப்படி வக்கீல் ஆனார் என்பதும் இந்த மாஸ்டர் பிளானை வைத்து யூகித்து விடலாம்.

மேலும் படிக்கவும் ...
சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்தத் தொடரில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பல முன்னனி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். வெற்றிகரமாக ஆயிரம் எபிஸோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் தற்போது விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இயக்குநர்.

டைகர் மாணிக்கம், செண்பகத்தின் உண்மையான வாரிசு யார் என்பது வெளிச்சத்துக்கு வரும் தருவாயில், அனு பல்வேறு சதி திட்டங்களை தீட்டுகிறார். மற்றொருபுறம், ரோஜா தான்தான் வாரிசு என்ற விஷயத்தை நிரூபித்து அம்மா அப்பாவுடன் மகிழ்ச்சியாக வாழ போராடுகிறார்.

டிஎன்ஏ டெஸ்டுக்கு ரோஜா தயாராகி அம்மாவுடன் காரில் செல்கிறார். ஆனால் அவர்களை செல்ல விடாமல் தடுக்க அனு துப்பாக்கியுடன் வழிமறிக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரோஜா அதிர்ச்சி அடைகிறார். ரோஜாவும், அனுவும் காரை விட்டு கீழே இறங்கி வந்து, நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ரோஜா மீது இருந்த கொலைவெறியில் அவரை துப்பாக்கியால் சுடுகிறார் அனு. ரோஜா கழுத்தில் குண்டு பாய்ந்து சரிகிறார்.

`அச்சச்சோ ரோஜாவை சுட்டுட்டாங்களே’ என்று நாம் உச்சு கொட்டும் சமயத்தில், ஒரு டிவிஸ்ட் வைக்கிறார் இயக்குநர். அதாவது அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து சரிந்தது ரோஜாவே கிடையாதாம். எல்லாம் ரோஜாவை காப்பாற்ற அர்ஜுன் போட்ட செட்டப்பாம்!

roja
ரோஜா சீரியல்


அனு துப்பாக்கியால் ரோஜாவை சுட போவதை முன்பே கண்டுபிடித்த அர்ஜுன், துப்பாக்கியின் நிஜ தோட்டாவை மாற்றி வைக்கிறார். இதனால் ரோஜா உயிர் பிழைக்கிறார். ஆனால் அர்ஜுன் சொன்னபடி குண்டு பாய்ந்த மாதிரி அனு முன்பு நடிக்கிறார். அடுத்த காட்சியில் ரோஜா இறந்தது போல் அனுவை நம்ப வைக்க, ஏற்கெனவே இறந்த பெண்ணின் உடலை கொண்டு வருகின்றனர். அந்த பெண்ணின் முகத்தில் நடுரோட்டில் வைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ரோஜா முகம் போன்று மாற்றுகின்றனர். இதனை பார்த்து ரோஜாவே வாய் பிளக்கிறார். இந்த காட்சியை டிவிட்டரில் கடுமையாக விமர்சித்தனர்.

இதையும் படிங்க.. உச்சபட்ச சொதப்பல்! - நெட்டிசன்களால் டிரால் செய்யப்படும் ரோஜா சீரியல்



அனு கைது செய்யப்படுகிறார். அனுவிடம் இருந்து உண்மைகளை வெளிக்கொண்டு வர அர்ஜுன் போலீஸுடன் சேர்ந்து மாஸ்டர் பிளான் செய்கிறார். அர்ஜூன் சொல்லும் பிளானை அப்படியே ஃபாலோ செய்கிறார் போலீஸ் அதிகாரி. ரோஜாவுக்கு பேய் வேடம் போட்டு ஜெயிலில் இருக்கும் அனுவை பயமுறுத்துவது தான் அர்ஜுன் போட்ட மாஸ்டர் பிளான். அந்த பெண் அதிகாரி எப்படி போலீஸ் ஆனார் என்பதும், அர்ஜுன் எப்படி வக்கீல் ஆனார் என்பதும் இந்த மாஸ்டர் பிளானை வைத்து யூகித்து விடலாம்.

அனு ரோஜாவை பேய் வேடத்தில் பார்த்ததும் மயங்கி விழுகிறார். உண்மையை சொல்லாமல் மயங்கி விட்டாளே என்று அனைவரும் வருந்துகின்றனர். இதற்கிடையில் நீலாம்பரி என்ற கேரக்டரை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர். நீலாம்பரியாக சோனா நடிக்கிறார்.







நீதிபதியை கொன்று விட்டு ஜெயிலுக்கு வந்த நீலாம்பரி, தண்டனை காலம் முடிந்து வெளியே வருகிறார். வெளியே வந்ததும் தான் ஜெயிலுக்கு போக காரணமாக இருந்த இரண்டு சிறுமிகளை கொலை செய்ய திட்டமிடுகிறார். அந்த சிறுமி வேறு யாருமில்லை ரோஜா தான். நீலாம்பரி செய்த கொலையை சிறுமியாக இருந்த ரோஜா போலீஸிடம் போட்டு கொடுக்கிறார். பல வருடங்கள் கடந்து விட்ட நிலையில், நீலாம்பரி ரோஜாவை தேடுகிறார்.

அனு சேப்டர் ஓரளவுக்கு முடிந்த நிலையில் தற்போது நீலாம்பரி கதையை ஆரம்பித்திருக்கின்றனர். இனி நீலாம்பரி எப்படி அர்ஜுன் சமாளித்து, ரோஜாவை காப்பாற்றுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!





உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: Sun TV, TV Serial, TV Serial Promos

அடுத்த செய்தி