ரோஜா-அர்ஜூனிடம் வசமாக மாட்டிக் கொண்ட அனு... விறுவிறுப்பான ரோஜா சீரியல்
ரோஜா-அர்ஜூனிடம் வசமாக மாட்டிக் கொண்ட அனு... விறுவிறுப்பான ரோஜா சீரியல்
Roja
Roja Serial | புரோமோவில் மட்டும் பரபரப்பு இல்லாமல், சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய தனிப்பட்ட செய்திகளும், புகைப்படங்களும் எப்போதுமே டிரெண்டிங்கில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன், சீரியலின் ஹீரோயின் பிரியங்காவின் நீச்சல் ஆடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சீரியல்களின் டி.ஆர்.பியை எகிற வைப்பதில் முதல் இடத்தில் இருப்பது பரபரப்பான புரோமோக்கள். சீரியல்களில் கதை எப்படி சுவாரஸ்யமாக கொண்டு போகிறார்கள் என்பது பல நேரங்களில் இரண்டாம் பட்சமாகிவிடும் அளவுக்கு புரோமோக்கள் பரபரப்பாக, விறுவிறுப்பாக எடிட் செய்யப்பட்டிருக்கும். பலர் புரோமோக்களைப் பார்த்தே சீரியல்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.
அது மட்டுமின்றி, மக்களின் ஆதரவை பெரிதளவு பெற்றதாகவும் இருக்கும். இந்த வரிசையில் சன் டிவியின் பிரபலமான ரோஜா சீரியல் அடங்கும். இதில் வருகின்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பினாலும், சிறந்த கதை அம்சத்தாலும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் தனி சிறப்பு பெற்றுள்ளது. அதே போன்று ரோஜா சீரியலில் நடிக்கும் நடிகைகள், மற்றும் நடிகர்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் புரோமோ வெளியாகியுள்ளது. அதன் படி, அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரும் திட்டமிட்டு வரும் ஆசிரம விழாவை தடுக்கும் முயற்சியில் சாக்ஷி வழக்கம் போல பிளான் செய்கிறார். அந்த காட்சிகள் ஒருபுறம் இருக்க, மற்றொரு காட்சியில், அனுவிடம் நகைகள் எங்கே என்று பாட்டி கேட்கும் காட்சிகளும் உள்ளன. நகையை மொத்தமாக அபேஸ் செய்யும் திட்டம் இருப்பதாகக் காட்சிகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு மட்டும் வேண்டுமென்று தானே நகையை கேட்டு வாங்கினாய் என்று பாட்டி கேட்க, அதற்கு அனு, அந்த நகையை தானே வைத்துக் கொள்வதாக பாட்டியிடம் கூறும் போது, ரோஜா மற்றும் அர்ஜுன் சரியான நேரத்தில் அங்கு ஆஜராகி நக்கலாக சிரிக்கிறார்கள். இதனால், அனுவின் திட்டம் என்ன ஆகப்போகிறது என்ற ஆவல் எழுந்துள்ளது.
புரோமோவில் மட்டும் பரபரப்பு இல்லாமல், சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய தனிப்பட்ட செய்திகளும், புகைப்படங்களும் எப்போதுமே டிரெண்டிங்கில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன், சீரியலின் ஹீரோயின் பிரியங்காவின் நீச்சல் ஆடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இப்படி மக்களின் மாபெரும் ஆதரவை பெற்ற ரோஜா சீரியல் சுமார் 1,000 எபிசோடுகளை கடந்து வெற்றி நடைபோடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது அந்த சீரியலில் நடித்து வரும் ஹீரோவான சிபு சூரியன் மற்றும் ஹீரோயின் பிரியங்கா ஆகிய இருவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி தான். இதனாலயே பலர் இந்த சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள். ரோஜா சீரியலின் கதாநாயகியான பிரியங்கா நல்காரியை பலருக்கும் பிடிக்கும். இல்லத்தரசிகள் இவரை அதிகம் விரும்புவது ஒரு பக்கம் இருந்தாலும், இளைஞர்களுக்கும் இவர் மிகவும் பிடித்தமான சின்னத்திரை நடிகையாக இருக்கிறார்.
Published by:Selvi M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.