Home /News /entertainment /

டி.ஆர்.பியில் கலக்கும் சீரியல்.. திடீரென்று பிரேக் எடுத்த சின்னத்திரை நடிகை!

டி.ஆர்.பியில் கலக்கும் சீரியல்.. திடீரென்று பிரேக் எடுத்த சின்னத்திரை நடிகை!

டிவி சீரியல்

டிவி சீரியல்

பிரியங்காவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளது என்பதை அவரின் சில இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது

    சில சீரியல்கள் அதிக டி.ஆர்.பியை கொண்டதாக இருக்கும். அத்தகைய சீரியல்கள் மக்களின் ஆதரவை பெரிதளவு பெற்றதாகவும் இருக்கும். இந்த வரிசையில் சன் டிவியின் பிரபலமான ரோஜா சீரியல் அடங்கும். இதில் வருகின்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பினாலும், சிறந்த கதை அம்சத்தாலும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் தனி சிறப்பு பெற்றுள்ளது. அதே போன்று இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள், மற்றும் நடிகர்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

    ரோஜா சீரியலின் கதாநாயகியான பிரியங்கா நல்காரியை பலருக்கும் பிடிக்கும். இல்லத்தரசிகள் இவரை அதிகம் விரும்புவது ஒரு பக்கம் இருந்தாலும், இளைஞர்களுக்கும் இவர் மிகவும் பிடித்தமான சின்னத்திரை நடிகையாக இருக்கிறார். மேலும், பல மாமியார்களுக்கும் இப்படியொரு சிறந்த மருமகள் தனக்கு கிடைக்கமாட்டாளா என்று ஏங்கும் அளவிற்கு இவரின் நடிப்பு பிரமாதமாக இருக்கும்.

    இப்படி மக்களின் மாபெரும் ஆதரவை பெற்ற ரோஜா சீரியல் சுமார் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றி நடைபோடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது அந்த சீரியலில் நடித்து வரும் ஹீரோவான சிபு சூரியன் மற்றும் ஹீரோயின் பிரியங்கா ஆகிய இருவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி தான். இதனாலயே பலர் இந்த சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள்.

    இதையும் படிங்க.. 'ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது' - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

    அதிக டிஆர்பி கொண்ட சீரியல் என்பதன் காரணமாகவே கடந்த பல மாதங்களாக ரோஜா சீரியலில் மிகவும் பிஸியாக நடித்து வந்தார் பிரியங்கா. மேலும் அவ்வப்போது விடுமுறைகள் கிடைக்கும் போதெல்லாம் ஜாலியாக எங்கேயாவது பயணம் போகும் பழக்கம் இவருக்கு உள்ளது. இந்நிலையில் பொங்கல் விடுமுறை என்பதால், பிரியங்கா தன் குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.

    அதில், "விடுமுறை காலம், குடும்பத்தோடு சுற்றுலா செல்ல உள்ளேன், இந்த பிரேக் எனக்கு அவசியம் தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இத்துடன் விமான நிலையத்தில் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட வீடியோவையும் அவர் இணைத்து பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பலரும் பார்த்து வருகின்றனர். பிரியங்காவின் ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர், "பாதுகாப்பாக சென்று வாருங்கள்", "என்ஜாய்", "சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்", "ஹேப்பி பொங்கல்" போன்ற கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு உள்ளனர்.




    பிரியங்காவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளது என்பதை அவரின் சில இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதே போன்று இவர் அடிக்கடி கோவிலுக்கு செல்லும் பழக்கமும் கொண்டவர். இந்த புத்தாண்டு தினத்தின் போது சாய் பாபா கோவிலுக்கு சென்று மிகப் பெரிய வரிசையில் நின்று தரிசித்து வந்துள்ளார். இதை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பிரியங்கா பதிவிட்டுள்ளார். இதையும் அவரின் ரசிகர்கள் பார்த்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இவர் ரோஜா சீரியலை போன்று மேலும் பல சாதனைகளை படைப்பார் என்பதில் சந்தேங்கம் இல்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி