அம்மனாக மாறி அருள் வாக்கும் சொல்லும் ரோஜா சீரியல் நடிகை!

ரோஜா சீரியல் பிரியங்கா

ரோஜா சீரியல் மீண்டும் முதலிடத்தை பிடிக்க கதையில் பல திருப்பங்களை கொண்டுவந்துள்ளது

 • Share this:
  அன்று முதல் இன்று வரை சீரியல் என்றாலே அதில் முன்னிலை வகிக்கும் ஒரே சேனல் சன் தொலைக்காட்சி தான்.

  இந்த தொலைக்காட்சிக்கு போட்டியாக பல சேனல்கள் சீரியல்களை கொண்டுவந்தாலும் டிஆர்பி-யில் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் இடம் பிடித்து வருகின்றன. அதிலும், டிஆர்பி-யில் முதலிடம் வகிக்கும் ஒரு சீரியல் என்றால் அது "ரோஜா" சீரியல் தான். அந்தளவுக்கு இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. வடிவுக்கரசி,ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

  இதில் கதாநாயகியாக லீடிங் ரோலில் நடித்து வருபவர் தான் பிரியங்கா. எப்போதும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அவ்வப்போது விதவிதமான மாடர்ன் உடைகளில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம். ஆனால் இம்முறை மங்களகரமான கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மூக்குத்தி அம்மன் போல ஜொலிக்கும் அவர் நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பார் போல என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

  சிவப்பு நிற சேலையில், நிறைய நகைகள் அணிந்து, அம்மனை போல கையில் சூலம் வைத்து கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனிடையே ரோஜா சீரியலில் இவர் இந்தகெட்டப்பில் வரலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஏனெனில், ரோஜா தனது தாயை கண்டுபிடிக்க பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளார். இதற்காக கோவில் செட்டப்பில் சீரியல் எபிசோட்கள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் ஸ்பெஷல் எபோஸோடாக வரும் ஞாயிற்றுகிழமை அன்று ஒரு மணி நேரத்திற்கு ஒளிபரப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரோஜா சீரியலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலும் போட்டிபோட்டுக் கொண்டு டிஆர்பி-யில் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருகின்றன. விறுவிறுப்பான கதை திருப்பதுடன் கடந்த 2 வாரங்களாக முன்னிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்தது. இதனால் இரண்டாம் இடத்திற்கு சென்ற ரோஜா சீரியல் மீண்டும் முதலிடத்தை பிடிக்க கதையில் பல திருப்பங்களை கொண்டுவந்துள்ளது. விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்து ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதில் இரு சீரியல்களும் தவறவில்லை என்றே சொல்லலாம்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Priyanka Nalkari Official இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nalkarpriyanka)


  அதிலும், ரோஜா தனது தாய் செண்பகத்தை சந்திப்பாரா?. தான் செண்பகம் என்று தெரியாமலே இருக்கும் ரோஜாவின் அம்மா, ரோஜா நடத்தும் பரிகார பூஜையில் கலந்துகொண்டு தனது சரியான மகளை தேர்ந்தெடுப்பாரா?, தனது குடும்பத்தை நேரில் பார்த்ததும் செண்பகத்திற்கு அனைத்தும் நினைவுக்கு வருமா? என்ற பல கேள்விகளுக்கு நாளை (செப்டம்பர் 12ம் தேதி) ஒளிபரப்பாக உள்ள ஸ்பெஷல் எபிசோடில் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: