ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஹீரோயின் பிரியங்கா கொடுத்த ஷாக்!

ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஹீரோயின் பிரியங்கா கொடுத்த ஷாக்!

ரோஜா சீரியல் பிரியங்கா

ரோஜா சீரியல் பிரியங்கா

ரோஜா சீரியல் ஹீரோயின் பிரியங்கா , இனிமேல் ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு இன்றைய எபிசோடில் மிகப் பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது. சீரியல் ஹீரோயின் பிரியங்காவின் ரசிகர்கள் இந்த சர்ப்ரைஸால் செம்ம ஹாப்பியில் உள்ளனர்.

தொலைக்காட்சி சீரியல்களில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியல் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளது.

இந்த சீரியலில்  ஹீரோயினாக நடித்து வருபவர்  பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அர்ஜூன்-ரோஜா கதாபாத்திரங்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழ் திரையுலகில் பிரியங்காவிற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஒரே சீரியல் ரோஜா தான்.

எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. கண்ணம்மாவை திட்டி தீர்க்கும் பாரதி!

இவர்  இதற்கு முன்பு தீயா வேலை செய்யனும் குமாரு, லாரன்ஸின் காஞ்சனா 3 என தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களின் மூலம் கிடைக்காத பேரும் புகழும் ரோஜாவால் கிடைத்துள்ளது. இந்த சீரியல் மூலம் இவர் 2 முறை சன் டிவி குடும்ப விருதுகளையும் வாங்கியுள்ளார். சீரியலில்  அம்மன் வேடம், பேய் என நடிப்பில் பட்டையை கிளப்பும் பிரியங்கா இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஷாக் கொடுத்துள்ளார்.

பிரியும் பாக்கியா - கோபி? பாக்கியலட்சுமி எபிசோடில் உச்சக்கட்ட பரபரப்பு!

அதாவது, பிரியங்கா இனிமேல் ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சீரியலில் இப்படியொரு ட்விஸ்ட் வரும் என ரசிகர்கள் கணிக்கவில்லை.

' isDesktop="true" id="769372" youtubeid="EpUzC9I_Wyg" category="television">

கதைப்படி இப்போது ரோஜா காணாமல் போய்விட்டார். ரவுடிகள் ரோஜாவை நடுகடலுக்கு அழைத்து சென்று அங்கிருந்து கடலில் தள்ளிவிடுகின்றனர். கடலில் விழுந்தாலும் ரோஜா பிழைத்து கொள்கிறார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது அர்ஜூனுக்கு தெரியாது. இப்படி இருக்கையில், ரோஜாவை கண்டுப்பிடிக்க என்ட்ரி கொடுக்கிறார் ஜெஸிக்கா. போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஜெஸிக்கா ரோலில் நடிப்பவரும் பிரியங்கா தான். இனிவரும் காலங்களில் ரோஜா - ஜெஸிக்கா என இரட்டை வேடத்தில் கலக்க போகிறார் பிரியங்கா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, Television, TV Serial