Home /News /entertainment /

குவியும் வாழ்த்துக்கள்.. மிகப் பெரிய கொண்டாட்டத்தில் ரோஜா சீரியல் நடிகை!

குவியும் வாழ்த்துக்கள்.. மிகப் பெரிய கொண்டாட்டத்தில் ரோஜா சீரியல் நடிகை!

ரோஜா சீரியல் பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

ரோஜா சீரியல் பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

ரோஜா சீரியல் பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

    தொலைக்காட்சி சீரியல்களில் எப்போதும் முதலிடத்தை பிடித்திருக்கும் சீரியல் என்றால் அது சன் டிவி-யின் ரோஜா சீரியல் தான். இப்போது அந்த இடத்தை கயல் சீரியல் பிடித்து விட்டது. ஆனாலும் ரோஜா சீரியலுக்கு எப்போதுமே மவுசு குறையவில்லை.  இந்த சீரியலில்  சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அர்ஜூன்-ரோஜா கதாபாத்திரங்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

    தமிழ் திரையுலகில் பிரியங்காவிற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஒரே சீரியல் ரோஜா தான்.பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

    முதன் முதலில் தெலுங்கில் இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.நடிப்பில் சிறந்து விளங்கும் இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. தமிழில் இவரது முதல் படம் தீயா வேலை செய்யனும் குமாரு. அந்த படத்தில் ஹன்சிகாவின் தோழியாக திவ்யஸ்ரீ என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஆகமொத்தம் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.



    பிறகு லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். இருப்பினும் தமிழ் சினிமாவில் இவருக்கு என ஒரு தனி முத்திரையை பதிக்க முடியவில்லை. இந்த நிலையில் இவருக்கு தமிழ் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சீரியல் தான் தற்போது செம ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியல்.பிரியங்கா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். நடனமாடுவதில் சிறந்து விளங்கும் இவர் ஏராளமான டான்ஸ் ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.அதேபோல, இவர் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை.



    இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை இந்த கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள் ரோஜா சீரியல் குழு தான். அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் சேர்ந்து இந்த சர்ப்பிரஸை பிரியங்காவுக்கு கொடுத்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி