முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மகனுடன் முதல் புகைப்படம்.. மகிழ்ச்சியில் ரோஜா சீரியல் அர்ஜூன்!

மகனுடன் முதல் புகைப்படம்.. மகிழ்ச்சியில் ரோஜா சீரியல் அர்ஜூன்!

ரோஜா அர்ஜூன்

ரோஜா அர்ஜூன்

ரோஜா சீரியல் அர்ஜூனுக்கு கடந்த மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது

  • 1-MIN READ
  • Last Updated :

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியல் புகழ் அர்ஜூன் மகன் பிறந்து 1 மாதம் கழித்து முதன் முறையாக இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் நாள் தோறும் மக்களின் மனதை கவரக் கூடிய சீரியல்கள் பல ஒளிப்பரப்பாகுகின்றன. அதிலும் குறிப்பாக பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் கதைக்களம், சிறந்த கதாபாத்திர தேர்வு, அனுபவம் மிக்க இயக்குனர் போன்ற காரணங்களினால் அந்த சீரியல் மாபெரும் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 25 வருடங்களாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் மக்களின் உள்ளம் கவர்ந்த நெடுந் தொடர்களாக உள்ளன.

ரசிகர்களின் ஃபேவரெட் சீரியல் நடிகை.. எதிர் நீச்சல் ஜனனி பற்றி இதெல்லாம் தெரியுமா?

சித்தி, அலைகள், கோலங்கள், மெட்டி ஒலி சீரியல்களுக்கு பின்பு சன் டிவியில் ரோஜா, சந்திர லேகா, கயல் சீரியல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ரோஜா சீரியலை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இதில் அர்ஜூனாக நடிக்கும் நடிகர் சிபு சூர்யன் சீரியலை விட்டு கிளம்புகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு அந்த முடிவை கடைசியில் ரசிகர்களுக்காக மாற்றிக் கொண்டார். அந்த அளவுக்கு இந்த சீரியல் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. சிபு சூர்யன், பிரியங்கா இருவருமே தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளனர். சிபு சூர்யன், அர்ஜூன் ரோலுக்காக 2 முறை சன் டிவி விருதையும் கைப்பற்றியுள்ளார்.

2வது குழந்தைக்கு தாயாகும் விஜய் டிவி சீரியல் பிரபலம்!

குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பலரும் சிபுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி இருந்தனர். ஆனால் மகனின் புகைப்படத்தை சிபு சூர்யன் வெளியிடவில்லை.


இந்நிலையில் முதன்முறையாக தனது மகனின் கைவிரலை பிடித்திருக்குபடியான புகைப்படத்தை சிபு சூர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இத்துடன் “ நாம் ஒன்றாக இணைந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும்.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மேஜிக்கல் பாண்ட்” என்ற கேப்ஷனையும் சிபு சூர்யன் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial