• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியலில் மாமியார்.. நிஜத்தில் ஸ்கூல் படிக்கும் மகள்.. ரோஜா மாமியார் கல்பனாவின் வயசு இதுதான்!

சீரியலில் மாமியார்.. நிஜத்தில் ஸ்கூல் படிக்கும் மகள்.. ரோஜா மாமியார் கல்பனாவின் வயசு இதுதான்!

ரோஜா சீரியல் கல்பனா

ரோஜா சீரியல் கல்பனா

ரவி என்பவரை திருமணம் செய்துகொண்டார் குழந்தை பிறந்ததால் மூன்று வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

  • Share this:
    சின்னத்திரை பெஸ்ட் மாமியாராக வலம் வரும் ரோஜா சீரியல் கல்பனாவின் ரியல் லைஃப் ஸ்டோரி இதுதான்.

    சின்னத்திரையில் எப்போதுமே மாமியார், அண்ணி கதாபாத்திரங்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதிகப்படியான பாசிடிவ் ரோல் அல்லது நெகட்டிவ் ரோல் இந்த இரண்டு கதாபாத்திரத்தில் தான் இருக்கும். வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரங்களாக இருந்த நடிகைகள் கூட சின்னத்திரையில் மாமியாராக, அண்ணியாக, அம்மாவாக நடித்து பெரிய அளவில் ரீச் வாங்கியுள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் தற்போது பெஸ்ட் மாமியார் போட்டியில் இருப்பவர்கள் சன் டிவி ரோஜா சீரியல் கல்பனா, விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் சவுந்தர்யா. இருவருமே நடிப்பில் கில்லி.

    இதில் ரோஜா கல்பனாவை எடுத்துக் கொண்டால் மெட்டி ஒலி சரோவில் இருந்தே சின்னத்திரையில் படு ஃபேமஸ் இவர். சொந்த பெயர் காயத்ரி சாஸ்திரி. பூர்விகம் பார்த்தால் கர்நாடகம். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். இவர் குடும்பத்தில் இருந்து வெள்ளித்திரைக்கு முதலில் வந்தவர் இவரின் அண்ணன் சஞ்சய் தான். வல்லி படத்தில் நெகடிவ் ரோல் பண்ணி இருப்பார். அவரை பார்க்க காயத்ரி சென்னை வந்த போது தான் இயக்குநர் சுரேஷ் மேனன் காயத்ரியை பார்த்துவிட்டு ‘பாசமலர்’ படத்தில் நடிக்க வைத்தார். விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அஜித் ஜோடி இவர் தான். தொடர்ந்து 5 மொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். அப்படியே சீரியல் பக்கம் வந்தவர் இந்தி சீரியலிலும் நடித்துள்ளார்.

    சன் டிவியில் ஒளிபரப்பான பல சீரியலிலும் நடித்துள்ளார். மெட்டி ஒலி சீரியல் இவரது வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயின்ட்டாக அமைந்தது. இதன் மூலம் குடும்ப பெண்களின் வீட்டில் ஒருவராகவே மாறிவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழில் ‘மேகலா’, இதனைத் ‘தேவதா’ போன்ற பல சீரியலில் நடித்து வந்தார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Gayathri Shastry இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shastrygayathri)






    இப்படி சீரியலில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் போது சின்னத்திரை இயக்குநர் ரவி என்பவரை திருமணம் செய்துகொண்டார் குழந்தை பிறந்ததால் மூன்று வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர் சன்டிவி ரோஜா சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். கல்பனா என்கிற கதாபாத்திரத்தில் அர்ஜூனினுக்கு பாசமான அம்மாவாக, ரோஜாவின் அன்பான மாமியாராக  நடிப்பில் பட்டய கிளப்பி வருகிறார்.

    சீரியலில் தான் 2 மகன்களுக்கு அம்மா, மூத்த மருமகள், ரோஜாவுக்கு மாமியார் என வயதுக்கு அதிக மான ரோல். ஆனால் நிஜத்தில் இவருக்கு ஸ்கூல் படிக்கும் மகள் தான் உள்ளார்.  சொல்லப்போனால் காயத்ரிக்கு இப்போது தான் 39 வயது. இவரின் செல்ல மகள் புகைப்படம் கூட சமீபத்தில் படு வைரலானது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: