ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விரைவில் ஒளிபரப்பாகும் ரோஜா கிளைமேக்ஸ்? சோகத்தில் ரசிகர்கள்

விரைவில் ஒளிபரப்பாகும் ரோஜா கிளைமேக்ஸ்? சோகத்தில் ரசிகர்கள்

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

இல்லத்தரசிகளைப் போலவே ரோஜா சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தொலைக்காட்சி சீரியல்களில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் குறிப்பாக ரோஜா சீரியல், மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது. சன் டி.வி.யில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இல்லத்தரசிகளின் நம்பர் ஒன் சாய்ஸ் ‘ரோஜா’ சீரியல் தான்.

    கடந்த 2018, ஏப்ரல் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார், வில்லி அனு கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயா நடித்து வருகின்றனர். இவர்களுடன் மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனின் அம்மா கதாபாத்திரத்திலும், வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரத்திலும், அர்ஜுன் அப்பாவாக சிவா, வழக்கறிஞராக ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    இதுல யார் குழந்தை...? சைத்ரா ரெட்டியின் படங்களைப் பார்த்து ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

    குறிப்பாக இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இல்லத்தரசிகளைப் போலவே ரோஜா சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.




     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)



    இந்நிலையில் தற்போதைய தகவலின் படி, ரோஜா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சி விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறதாம். இதையறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Sun TV, TV Serial