ரோஜா சீரியலில் அர்ஜூன் என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபு சூர்யன், சீரியல் முடிவடைவது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தொலைக்காட்சி சீரியல்களில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் குறிப்பாக ரோஜா சீரியல், மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது. சன் டி.வி.யில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இல்லத்தரசிகளின் நம்பர் ஒன் சாய்ஸ் ‘ரோஜா’ சீரியல் தான்.
இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார், வில்லி அனு கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயா நடித்து வருகின்றனர். இவர்களுடன் மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனின் அம்மா கதாபாத்திரத்திலும், வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரத்திலும், அர்ஜுன் அப்பாவாக சிவா, வழக்கறிஞராக ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இல்லத்தரசிகளைப் போலவே ரோஜா சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இதற்கிடையே ரோஜா சீரியல் விரைவில் முடிவடையும் விஷயத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் சீரியல் முடிவடைவது குறித்து நடிகர் சிபு சூர்யன் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்ன ஒரு அழகான பயணம். 4 ஆண்டுகளுக்கு மேல் 100-க்கும் அதிகமான நினைவுகளுடன், அதிக அன்பும். இன்று ரோஜா சீரியலில் எனது பகுதியின் இறுதி படப்பிடிப்பை முடித்த இவ்வேளையில், அதிகமாக ரசிகப்பப்பட்ட அர்ஜூன் கதாபாத்திரத்தை என்னை நம்பி, எனக்களித்த சரிகமா நிறுவனத்துக்கும், சன் டிவி-க்கும் நன்றி.
View this post on Instagram
ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது அன்பும் அரவணைப்பும். விரைவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், அர்ஜூன் கதாபாத்திரத்தை தாங்கள் மிஸ் செய்வதாக கமெண்டுகளில் குறிப்பிட்டு வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.