Home /News /entertainment /

ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு.. குவியும் வாழ்த்துக்கள்

ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு.. குவியும் வாழ்த்துக்கள்

ரோஜா சீரியல் நடிகை

ரோஜா சீரியல் நடிகை

ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஷாமிலிக்கு குழந்தை பிறந்துள்ளது

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    ஹீரோ ஹீரோயின்களுக்கு இருப்பதைப் போலவே வில்லன் அல்லது வில்லியாக நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கும். சீரியலில் வில்லன் பாத்திரம் மீது கடும் அதிருப்தி அல்லது எதிர்ப்பு ஏற்பட்டால் குறிப்பிட்ட நடிகரோ நடிகையோ அந்த பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து வருகிறார் என்பதே அர்த்தம். அந்த வரிசையில் சீரியல் வில்லிகளில் ரோஜா சீரியல் வில்லி அனுவாக நடிகை ஷாமிலி சுகுமாருக்கு ஸ்பெஷல் இடமே உள்ளது.

    இவர் ரோஜா சீரியலில் இருந்து விலகியது சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டது. வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஷாமிலிக்கு இப்போது குழந்தை பிறந்துள்ளது குழந்தை பிறந்த செய்தியை ரசிகர்களிடம் தெரிவித்த ஷாமிலிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    சீரியலின் நடுவில் தொய்வு ஏற்படும் பொழுது கதைக்களத்தை மாற்றுவது வழக்கம். கதை ஆசிரியரையும் மாற்றும் பழக்கம் தமிழ் சீரியல்களில் உள்ளது. ஆனால் சீரியலில் இருந்து விலகுவதற்கு எந்தவிதமான காரணமும் இன்றி மிகவும் பிரபலமான பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷாம்லி திடீரென்று விலகியது சின்னத்திரை வட்டாரத்தில் மட்டும் அல்லாமல் ரசிகர்களிடமும் மிகப்பெரிய ஏமாற்றத்தை உருவாக்கியது.

    ரோஜா தொடரில் வில்லியாக ஷாமிலி சுகுமார் நடித்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்திருந்தார்.காரணம், இவருடைய கதாபாத்திரத்தின் வலிமை. வில்லியாக வரக்கூடிய ஒவ்வொரு பிரேம்களிலும் நடிப்பை தெறிக்க விட்ட அவருக்கு, சன் குடும்ப தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த வில்லிக்கான விருதை பெற்று அசத்தினார். அவருடைய நடிப்பை ரசிகர்கள் பெருமளவு ரசித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென சீரியலில் இருந்து விலகினார்.

    அவர் வெளியேறிய போது எந்த காரணத்திற்காக வெளியேறினார் என்பதை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை ஆனால் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் ரோஜா சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என்று தான் தன்னுடைய யூ டியூப் சேனலில் வெளியிட்டார். ரோஜா சீரியலில் வில்லி பாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஆனால் சீரியலில் மேற்கொண்டு நடிக்க முடியாது என்றும் கூறினார். தற்போது கர்ப்பமாக இருப்பதால், தொடர்ந்து சீரியல் சூட்டிங்கில் பங்கேற்க முடியாது என்பதால், சிறிது காலத்துக்கு நடிப்பில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Shamili Sukumar (@shamili_sukumar)






    சீரியலில் இருந்து வெளியேறினாலும், சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாகவே இருந்தார் ஷாமிலி. இவருடைய வளைகாப்பு, மெட்டர்னிட்டி சூட் புகைப்படங்கள் என்று எல்லாமே ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது, தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை, இளவரசி பிறந்துள்ளதாக ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பதிவில் குழந்தையின் புகைப்படத்தோடு தெரிவித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Shamili Sukumar (@shamili_sukumar)






    இவரின் பதிவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.ஷாமிலி நடித்த அனு கேரக்டரில் தற்போது விஜே அக்ஷயா நடித்து வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Sun TV

    அடுத்த செய்தி