Home /News /entertainment /

சின்னத்திரை டி.ஆர்.பி-யை தட்டித்தூக்கிய Roja... இந்திய அளவில் சாதனை! 

சின்னத்திரை டி.ஆர்.பி-யை தட்டித்தூக்கிய Roja... இந்திய அளவில் சாதனை! 

ரோஜா சீரியல் நடிகை

ரோஜா சீரியல் நடிகை

Roja Serial | 1000 எபிசோட்களை கடந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் ரோஜா சீரியல் வேறு எந்த சீரியலும் செய்யாத அளவிற்கு இந்திய அளவில் சாதனை படைத்து கெத்து காட்டியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டி.ஆர்.பி.யில் இந்திய அளவில் படைத்துள்ள சாதனை ரசிகர்களை சோசியல் மீடியாவில் கொண்டாட வைத்துள்ளது.

பொழுதுபோக்கு டி.வி. சேனல்கள் என்ன தான் படம், நிகழ்ச்சி, சிறப்பு நிகழ்ச்சி, பாட்டு என விதவிதமாக ஒளிபரப்பினாலும், சீரியல்கள் மட்டுமே ஆணிவேராக இருக்கிறது. அதன்மூலமாக தான் ஆடியன்ஸ் மற்றும் விளம்பரதாரர்கள் மத்தியிலும் தாக்கு பிடிக்க முடிகிறது. ஒரு சீரியல் என்ன தான் ரசிகர்களால் ஆஹா, ஓஹோ என கொண்டாடப்பட்டாலும், அதன் வெற்றி தோல்வியை டி.ஆர்.பி. ரேட்டிங் தான் தீர்மானிக்கிறது.

இந்த டி.ஆர்.பி. விவகாரத்தில் எப்போதுமே சன் டி.வி. மற்றும் விஜய் டி.வி இடையே  கடும் மோதல் உண்டு. எப்போதாவது இந்த சண்டையில் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் சீரியல்கள் இடம் பெறுவது உண்டு. விஜய் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கியலட்சுமி’, ‘பாரதி கண்ணம்மா’ ஆகிய தொடர்களும், சன் தொலைக்காட்சியில் ‘வானத்தைப் போல’, ‘ரோஜா’, ‘கயல்’, ‘சுந்தரி’ சீரியல்கள் மாறி, மாறி இடம் பெற்று வரும், தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ சீரியலுக்கும் நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது.

சன் டி.வி.யில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இல்லத்தரசிகளின் நம்பர் ஒன் சாய்ஸ் என்பது ‘ரோஜா’ சீரியல் தான். இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார், வில்லி அனு கதாபாத்திரத்தில் VJ அக்க்ஷயா, மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனின் அம்மா கதாபாத்திரத்திலும், வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரத்திலும், அர்ஜுன் அப்பாவாக சிவா, வழக்கறிஞராக ராஜேஷ்,  ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

Also Read : இது தான் விஜய்யின் சொகுசு பங்களாவா? கவனம் பெறும் புகைப்படம்!

என்ன தான் ‘கோர்ட்டு, ஜெயிலு, குடும்ப விழா ரீப்பிட்டு’ என மாத்தி, மாத்தி காண்பித்தாலும் ரோஜா சீரியலுக்கான மவுசு ரசிகர்களிடையே குறைவது இல்லை. 1000 எபிசோட்களை கடந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் ரோஜா சீரியல் வேறு எந்த சீரியலும் செய்யாத அளவிற்கு இந்திய அளவில் சாதனை படைத்து கெத்து காட்டியுள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by SUNTELEVISIONS (@suntv_fanzclub)






தேசிய அளவிலான டாப் 10 டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பட்டியலில் தமிழ் சீரியலான ‘ரோஜா’ இடம் பெற்றுள்ளது. 20.32 டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று இந்த டாப் 10 வரிசையில் ரோஜா சீரியல் உள்ளது. வேறு எந்த தொடருக்கும் கிடைக்காத புகழ் ரோஜா சீரியலுக்கு கிடைத்துள்ளதால் இதை சன் டி.வி. பேன்ஸ் கிளப் சோசியல் மீடியாவில் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Sun TV, TRP Rating, TV Serial

அடுத்த செய்தி