• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முதலாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் சிறப்பாக கொண்டாடிய பிரபல சீரியல் வில்லி - வைரலாகும் போட்டோ ஷூட்!

முதலாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் சிறப்பாக கொண்டாடிய பிரபல சீரியல் வில்லி - வைரலாகும் போட்டோ ஷூட்!

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

கடந்த வருடம் விஜே அக்ஷயாவிற்கு திருமணம் முடிந்த நிலையில் சமீபத்தில் தனது கணவர் நியந்தன் மணிசேகரனுடன் முதலாம் திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

  • Share this:
தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களின் பெருவாரியான ஆதரவு பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறன. அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான சன் டிவி-யிலும் காலை முதல் இரவு வரை ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் மற்ற எந்த சீரியலுக்கு கிடைக்காத ரசிகர்களின் பெரும் ஆதரவு ரோஜா சீரியலுக்கு கிடைத்து இருக்கிறது. ரோஜா சீரியல் ஒளிபரப்பாகும் ப்ரைம் டைமிங்கில் சன் டிவி-யின் டிஆர்பி ரேட்டிங் எகிறி காணப்படுகிறது.

இந்த சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் என்ற கேரக்டரில் பெங்களூருவை சேர்ந்த நடிகர் சிபு சூர்யன், கதாநாயகியாக ரோஜா கேரக்டரில் விசாகபட்டினத்தை சேர்ந்த பிரியங்கா நல்கார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களை தவிர ரோஜா சீரியலில் வெங்கட் ரங்கநாதன், காயத்ரி சாஸ்திரி(கல்பனா கேரக்டர்), வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்து வருகிறார்கள். இந்த பரபரப்பான சீரியலில் முக்கிய கதாபாத்திரமான வில்லி கேரக்டரில் பிரபல சீரியல் நடிகை ஷாமிலி சுகுமார் நடித்து வந்தார். இவர் இந்த சீரியலில் ரோஜாவுடன் ஒன்றாக அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர் போலவும், மாணிக்கத்தின் பொய்யான மகள் என்பது போலவும் காட்டப்பட்டு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே சில தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீரியலில் இருந்து விளக்கினார் நடிகை ஷாமிலி சுகுமார். இவர் நடித்து வந்த வில்லி கேரக்டரில் தற்போது விஜே அக்ஷயா நடித்து வருகிறார். சன் டிவி-யில் ஏற்கனவே காலை ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் ஆங்கராக கலக்கி வந்த விஜே அக்ஷயாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனிடையே ஆங்கரிலிருந்து நடிகையாக மாறிய பிறகு இவரது மிரட்டலான வில்லத்தன நடிப்பால் மேலும் பல ரசிகர்களை பெற்றுள்ளார். கடந்த வருடம் விஜே அக்ஷயாவிற்கு திருமணம் முடிந்த நிலையில் சமீபத்தில் தனது கணவர் நியந்தன் மணிசேகரனுடன் முதலாம் திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அக்ஷயா.

Also read... ’இவ்வளவு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை’ - இப்போது ஃபீல் பண்ணும் சீரியல் நடிகை! 
View this post on Instagram

 

A post shared by Akshayaa 👸 (@vjakshaya)


தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் முதலாம் திருமண நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி உள்ளனர். இது தவிர அக்ஷயாவும் நியந்தனும் ஒரு சிறப்பு போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி உள்ளனர். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோவையும் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து கணவருக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜே அக்ஷயா. 
View this post on Instagram

 

A post shared by Akshayaa 👸 (@vjakshaya)


அவர் பதிவிட்டுள்ள போஸ்ட்டில், " எங்கள் திருமணம் நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஒன்றாக வாழ வேண்டும் என்ற கனவோடு தொடங்கிய எங்கள் வாழ்க்கையில், நாங்கள் நினைத்த கனவு சிறப்பாக நடந்தேறி வருகிறது. முதலாம் திருமணநாள் வாழ்த்துக்கள்! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் அன்பே என்று தனது கணவர் @niyanthanmanisekaran-ஐ டேக் செய்து இருக்கிறார். ரசிகர்களும் விஜே அக்ஷயாவிற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: